Wednesday, December 25, 2013

true love story - mutha;amman



தேனி மாவட்டம் கம்பம்பகுதியில் முத்தாலம்மன் என்று ஒரு அம்மன் சாமி இருக்கிறது. இன்று பல பிரிவை சேர்ந்த மக்கள் வணங்கி வந்தாலும், குறிப்பிட்ட பிரிவின் மக்களின் சாமிதான் அது... அந்த சாமியின் வரலாறு என்ன என்று தெரியுமா...??

சில வருடங்களுக்கு முன்பு  அந்த பகுதியில் முத்தாலம்மன் என்ற பெயரில் ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அவள் அதே ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள ஒரு இளைஞனுடன் காதல் வசப்பட்டாள். பின்பு இருவரும் காதலித்து வந்தனர்.

என்றுமே காதலிப்பவர்களுக்கு சாதி என்பது கிடையாது அல்லவா..? ஊர் பெரியவர்கள் தான சாதி என்ற இழவை கட்டி கொண்டு அழுவார்கள். ஆகவே முத்தாலம்மன் ஒரு முடிவு எடுத்தாள். இருவரும் ஊரை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

பின்பு ஊர் பெரியவர்கள் அவர்களை தேடி கண்டு பிடித்து அவள் காதலனை அங்கேயே வெட்டி பலிகொடுத்தார்கள். அவளை மட்டும் ஊருக்கு இழுத்து வந்தார்கள். ஊர் எல்லையில் உள்ள குலக்கரையில் அவளை குண்டாந்தடியால் (உருட்டு கட்டையால்) அடித்தே கொன்றார்கள். ஊரே கூடி வேடிக்கை பார்த்தது. பெண்கள், குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுதார்கள். ஆனாலும் சாதி பெரியவர்களை எதிர்த்து எதுவும் பேசமுடியவில்லை.

அந்த படுகொலையை கண்ணால் கண்ட அனைவருக்கும் அன்று இரவு சரியாக தூக்கமே வரவில்லை. எனவே இதற்கு பிராயர்சித்தமாய் அந்த ஊரில் உள்ள நல்லவ்ர்கள் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்தனர். அது " முத்தலம்மனுக்கு கோவில் கட்டி சாமியாக்கி கும்பிடுவது"  ஆனால் கொல்லப்பட்ட அவளது கணவனை எல்லோரும் மறந்துவிட்டனர். காரணம் அவன் தான் தாழ்த்தப்பட்ட சாதிக்கரனாச்சே, யார் நினைக்கப்போகிறார்கள்.

ஆனாலும் சாதிபெருசுக அப்படியே முத்தாலம்மனை ஏற்றுகொள்ளாவில்லை. அவளை எப்படி கும்பிடவேண்டும் என்று ஒரு உத்தரவு போட்டனர். அதாவது ஐப்பசி மாதம் சிறிய விழாவாக எடுக்கவேண்டும். ஒரு நாள் பகல் முழுவதும் கோவிலில் வைத்து அவளை கும்பிடலாம். அன்று இரவே அச்சிலையை எடுத்து வந்து கட்டையால் அடித்து நொறுக்கிவிட வேண்டும். இதுதான் அம்மனை வழிபடும் முறை என்றார்கள்.
தாழ்ந்த சாதிக்கரனோடு ஓடிப்போய் நம்ம சாதிக்கவுரவத்தை கெடுத்தவளுக்கு இதுதான் மரியாதை என்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள். அன்று முதல் இன்று வரை அந்த முத்தாலம்மன் இன்னும் கட்டையால் அடிபட்டு செத்துக்கொண்டிருக்கிறாள். இப்போது அப்பகுதிக்கு போனாலும் இதை பார்க்கலாம். அடித்து நொறுக்கி ஆற்றில் ஆற்றில் கரைத்து விடும் பழக்கமாக அது இன்னும் நீடிக்கிறது.

சாதி பெரிதில்லை தன் காதல் தான் பெரிது என்று போனவள் முத்தாலம்மன். ஆனால் காதல் பெரிதில்லை, சாதிதான் பெரிது என்று நம் சமூகம் இன்றும் அவளை போட்டு அடித்து கொண்டிருக்கிறது…..

என்ன கலாச்சாரம்டா இது....
.
.
(படித்ததில் பிடித்தது)
சாமிகளின் பிறப்பும் இறப்பும் புத்தகத்திற்க்கு நன்றி

Sunday, December 22, 2013

madurai veeran (மதுரைவீரன்)



இன்று நாம் கடவுளாக வணங்கப்படும் மதுரைவீரன் சாமி மதுரை பக்கம் ஒரு முந்நுறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதர் தான்.

அவர் சக்கிலியர் எனப்படும் அருந்ததியர் சாதிக்காரர். சக்கிலியர் என்றால் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். கக்கூஸ் சுத்தம் செய்வது, சாக்கடை சுத்தம் செய்வது, நாம் இருந்து வைக்கும் மலத்தை அள்ளிக்கொண்டு ஊருக்கு வெளியே கொட்டுவது, செருப்பு தைப்பது, சுடுகாட்டில் பிணம் எரிப்பது போன்ற வேளைகள் அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளன.

மிகமிக முக்கியமான வேளையை செய்கிறவர்கள் இவர்கள் தான். ஆனால் இவர்களை நாம் மதிப்பதில்லை. அடுத்தவர் இருந்து வைக்கும் அசிங்கத்தில் நாம் தெரியாமல் காலை வைத்துவிடால் அச்சச்சோ என்று ஓடிப்போய் காலை கழுவிடுறோம். ஆனால் ஊரார் எல்லாருடைய மலத்தையும் சுத்தம் செய்கிற இவர்கள் உண்மையில் எவ்வளவு பெரிய மனசுக்காரர்கள்..! நாம் மாட்டேன் போ என்று இவர்கள் சொல்லிவிட்டால் என்ன ஆகும்.. ஊரே நாறிப்போகுமல்லவா..? அப்படிபட்ட புனிதமான வேளை செய்யும் இவர்களை... சிறு வயதில் நமக்கு ஆய் கழுவி சுத்தம் செய்கிற அம்மா மாதிரியான இவர்களை... சாதி என்ற பெயரை சொல்லி கிழே வைத்திருக்கிறோம். எவ்வளவு மோசமான மனிதர்கள் நாம்.? இந்த கக்கூஸ் கழுவும் வேளை கூட சில நூறூ ஆண்டுகளுக்கு முன் இவர்கள் மீது கட்டாயமாக திணிக்கப்பட்டவைதான்.. பிறப்பில் அனைவரும் மனிதன் தான்.. அதை முதலில் புறிந்து கொள்ள வேண்டும்...

மதுரை பக்கம் பிறந்த மதுரைவீரன் உண்மையில் பெரிய வீரன் தான். நாட்டுக்கு பாதுகாப்பாக இருந்தான். அப்போது மதுரை மன்னர் திருமலையின் மகள் பொம்மி மதுரைவீரன் மீது காதல் கொண்டாள். அவளது காதலுக்கு மதுரைவீரனும் சரி என சொல்ல இரண்டுபேரும் கல்யாணம் செய்து கொண்டார்கள். இப்படி ஒரு கீழ் சாதிக்காரன் கல்யாணம் செய்து விட்டானே என்று மேல்சாதிக்காரர்களுக்கு கோபம். அதனால் அவனை பிடித்து கொலை செய்து விட்டனர். பிடித்து போய் கல்யாணம். செய்வது என்ன தப்பா..? ஆனால் அன்று போலிஸ் ஸ்டேசன்,சட்டம், நீதி எல்லாமே மன்னர்கள் தான். மன்னனை மீறி அன்று ஒன்றும் செய்யமுடியாது. எதிர்த்து பேசினால் வெட்டிபோடுவான். ஆகவே மக்கள் யோசித்தனர். மதுரைவீரனை ஒரு சாமியாக்கி கும்பிட ஆரம்பித்தனார். மன்னனால் இப்போது என்ன சொல்ல முடியும்.? சாமி கும்பிடுவதை தடுத்தால் அது சாமி குத்தம் ஆகிடும். அவர்களின் எதிர்ப்பை அன்று அப்படிதான் காட்டமுடிந்தது. பிற்காலத்தில் மக்கள் அனைவராலும் வணங்கப்பட்து...

காதலிப்பது குற்றம் அல்ல... கலப்புதிருமணத்தை ஆதரிப்போம்....
.
.
(படித்ததில் பிடித்தது)

Wednesday, December 4, 2013

vanayakar vazipadu (வாதாபி கணபதி)

பரஞ்தோதி என்னும் பல்லவ படைத்தலைவன், வாதாபி நாட்டின் மீது படையெடுத்து சென்று, அந்நகரை வென்றான். அப்பொழுது அங்கு மனித உடலுடனும், யானை தலையுடனும் கூடிய உருவசிலையை கண்டான். அதிசயித்தான். அச்சிலையை ஒரு அதிசய பொருளாக தமியகத்திற்க்கு கொண்டுவந்தான். அதன்பின் அச்சிலைக்கு வினாயகர் என பெயர் சூட்டி தமிழகத்திலும் வணங்கத் தலைப்பட்டனர். "வாதாபி கணபதி" என்று வினாயகரை வழிபடுவதே அதற்கு போதிய ஆதாரமாகும்.

அதே போல் நாம் வழிபடும் முருகன் முதலில் தமிழகத்தில் மட்டும் கடவுளாக வழிபடபட்டது. அதனால் தான் முருகனை தமிழ் கடவுள் என்று சொல்லுகிறோம். பின்பு இங்குள்ள மன்னர்கள் வடக்கே படையெடுத்து சென்றாதால் காலப்போக்கில் அங்கு முருகன் வழிபாடு வர ஆரம்பித்தது. இப்படி இருக்கும் போது இருவரும் எப்படி அண்ணன் தம்பி ஆக முடியும்.. அதன் எழுதப்பாட்ட கதைகளில் இவர்கள் அண்ணன் தம்பி என உரவு கற்பிக்கப்பட்டு எழுதியதால் அப்படி ஆனது.

அடுத்தது தமிழகத்தில் இருப்பவர்கள் வினாயகர் கல்யாணம் ஆகாத கடவுள்னு சொல்லுறாங்க. ஆனா வடக்கே இரண்டு மனைவி இருக்குனு சொல்லுறாங்க. ஒருவேலை பல்லவ படைத்தலைவன் பரஞ்சோதி வரும்பொழுது அதன் அருகில் இருந்த இரண்டு மனைவி சிலையை எடுக்காமல் வந்திருப்பார்னு நினைக்கிறேன்.பாவம் வினாயகர் இங்கு மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

ஒவ்வொரு பகுதியிலும் வாழ்ந்த மக்கள் தங்கள் தங்கள் விருப்பத்திற்க்கும், இயல்பிற்க்கும், சூழ்நிலைக்கும், பழக்கவழக்கத்திற்க்கும் ஏற்ப்ப கடவுளை உவருவாக்கினர். அவற்றையே வழிபட்டார். முரட்டுத்தனமான இயல்பும், மாமிசம் உண்ணும் பழக்கம் உள்ள மக்கள் அதற்கேற்பக் கடவுளை உருவாக்கினர். அவைகளுக்கு கத்தி, வேல், வாள், சூலம் முதலிய ஆயுதங்களை அணிவித்து மாமிசம் வைத்துப் படைத்து வழிபட்டனர். சாந்தகுணமுள்ளவர்கள், மாமிசம் உண்ணாதவர்கள் அதற்கேற்ப தங்கள் கடவுளை உருவாக்கி வழிபட்டனர்.

(படித்ததில் பிடித்தது)