இன்று நாம் கடவுளாக வணங்கப்படும் மதுரைவீரன் சாமி மதுரை பக்கம் ஒரு முந்நுறு வருடங்களுக்கு
முன்னால் வாழ்ந்த ஒரு மனிதர் தான்.
அவர் சக்கிலியர் எனப்படும் அருந்ததியர் சாதிக்காரர். சக்கிலியர் என்றால் உங்களுக்கு
தெரியும் என்று நினைக்கிறேன். கக்கூஸ் சுத்தம் செய்வது, சாக்கடை சுத்தம் செய்வது, நாம் இருந்து வைக்கும்
மலத்தை அள்ளிக்கொண்டு ஊருக்கு வெளியே கொட்டுவது, செருப்பு தைப்பது, சுடுகாட்டில் பிணம் எரிப்பது போன்ற வேளைகள்
அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளன.
மிகமிக முக்கியமான வேளையை செய்கிறவர்கள் இவர்கள் தான். ஆனால் இவர்களை நாம் மதிப்பதில்லை.
அடுத்தவர் இருந்து வைக்கும் அசிங்கத்தில் நாம் தெரியாமல் காலை வைத்துவிடால் அச்சச்சோ
என்று ஓடிப்போய் காலை கழுவிடுறோம். ஆனால் ஊரார் எல்லாருடைய மலத்தையும் சுத்தம் செய்கிற
இவர்கள் உண்மையில் எவ்வளவு பெரிய மனசுக்காரர்கள்..! நாம் மாட்டேன் போ என்று இவர்கள் சொல்லிவிட்டால் என்ன ஆகும்..
ஊரே நாறிப்போகுமல்லவா..? அப்படிபட்ட புனிதமான
வேளை செய்யும் இவர்களை... சிறு வயதில் நமக்கு ஆய் கழுவி சுத்தம் செய்கிற அம்மா மாதிரியான
இவர்களை... சாதி என்ற பெயரை சொல்லி
கிழே வைத்திருக்கிறோம். எவ்வளவு மோசமான மனிதர்கள் நாம்.? இந்த கக்கூஸ் கழுவும் வேளை கூட சில நூறூ ஆண்டுகளுக்கு முன் இவர்கள் மீது
கட்டாயமாக திணிக்கப்பட்டவைதான்.. பிறப்பில் அனைவரும் மனிதன் தான்.. அதை முதலில் புறிந்து
கொள்ள வேண்டும்...
மதுரை பக்கம் பிறந்த மதுரைவீரன் உண்மையில் பெரிய வீரன் தான். நாட்டுக்கு பாதுகாப்பாக
இருந்தான். அப்போது மதுரை மன்னர் திருமலையின் மகள் பொம்மி மதுரைவீரன் மீது காதல் கொண்டாள். அவளது
காதலுக்கு மதுரைவீரனும் சரி என சொல்ல இரண்டுபேரும் கல்யாணம் செய்து கொண்டார்கள். இப்படி ஒரு கீழ் சாதிக்காரன்
கல்யாணம் செய்து விட்டானே என்று மேல்சாதிக்காரர்களுக்கு கோபம். அதனால் அவனை பிடித்து
கொலை செய்து விட்டனர். பிடித்து போய் கல்யாணம். செய்வது என்ன தப்பா..? ஆனால் அன்று போலிஸ் ஸ்டேசன்,சட்டம், நீதி எல்லாமே மன்னர்கள்
தான். மன்னனை மீறி அன்று
ஒன்றும் செய்யமுடியாது. எதிர்த்து பேசினால் வெட்டிபோடுவான். ஆகவே மக்கள் யோசித்தனர்.
மதுரைவீரனை ஒரு சாமியாக்கி கும்பிட ஆரம்பித்தனார். மன்னனால் இப்போது என்ன சொல்ல முடியும்.? சாமி கும்பிடுவதை தடுத்தால் அது சாமி குத்தம் ஆகிடும். அவர்களின் எதிர்ப்பை அன்று அப்படிதான்
காட்டமுடிந்தது. பிற்காலத்தில் மக்கள் அனைவராலும் வணங்கப்பட்து...
காதலிப்பது குற்றம் அல்ல... கலப்புதிருமணத்தை ஆதரிப்போம்....
.
.
(படித்ததில் பிடித்தது)
No comments:
Post a Comment