Wednesday, December 25, 2013

true love story - mutha;amman



தேனி மாவட்டம் கம்பம்பகுதியில் முத்தாலம்மன் என்று ஒரு அம்மன் சாமி இருக்கிறது. இன்று பல பிரிவை சேர்ந்த மக்கள் வணங்கி வந்தாலும், குறிப்பிட்ட பிரிவின் மக்களின் சாமிதான் அது... அந்த சாமியின் வரலாறு என்ன என்று தெரியுமா...??

சில வருடங்களுக்கு முன்பு  அந்த பகுதியில் முத்தாலம்மன் என்ற பெயரில் ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அவள் அதே ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள ஒரு இளைஞனுடன் காதல் வசப்பட்டாள். பின்பு இருவரும் காதலித்து வந்தனர்.

என்றுமே காதலிப்பவர்களுக்கு சாதி என்பது கிடையாது அல்லவா..? ஊர் பெரியவர்கள் தான சாதி என்ற இழவை கட்டி கொண்டு அழுவார்கள். ஆகவே முத்தாலம்மன் ஒரு முடிவு எடுத்தாள். இருவரும் ஊரை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

பின்பு ஊர் பெரியவர்கள் அவர்களை தேடி கண்டு பிடித்து அவள் காதலனை அங்கேயே வெட்டி பலிகொடுத்தார்கள். அவளை மட்டும் ஊருக்கு இழுத்து வந்தார்கள். ஊர் எல்லையில் உள்ள குலக்கரையில் அவளை குண்டாந்தடியால் (உருட்டு கட்டையால்) அடித்தே கொன்றார்கள். ஊரே கூடி வேடிக்கை பார்த்தது. பெண்கள், குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுதார்கள். ஆனாலும் சாதி பெரியவர்களை எதிர்த்து எதுவும் பேசமுடியவில்லை.

அந்த படுகொலையை கண்ணால் கண்ட அனைவருக்கும் அன்று இரவு சரியாக தூக்கமே வரவில்லை. எனவே இதற்கு பிராயர்சித்தமாய் அந்த ஊரில் உள்ள நல்லவ்ர்கள் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்தனர். அது " முத்தலம்மனுக்கு கோவில் கட்டி சாமியாக்கி கும்பிடுவது"  ஆனால் கொல்லப்பட்ட அவளது கணவனை எல்லோரும் மறந்துவிட்டனர். காரணம் அவன் தான் தாழ்த்தப்பட்ட சாதிக்கரனாச்சே, யார் நினைக்கப்போகிறார்கள்.

ஆனாலும் சாதிபெருசுக அப்படியே முத்தாலம்மனை ஏற்றுகொள்ளாவில்லை. அவளை எப்படி கும்பிடவேண்டும் என்று ஒரு உத்தரவு போட்டனர். அதாவது ஐப்பசி மாதம் சிறிய விழாவாக எடுக்கவேண்டும். ஒரு நாள் பகல் முழுவதும் கோவிலில் வைத்து அவளை கும்பிடலாம். அன்று இரவே அச்சிலையை எடுத்து வந்து கட்டையால் அடித்து நொறுக்கிவிட வேண்டும். இதுதான் அம்மனை வழிபடும் முறை என்றார்கள்.
தாழ்ந்த சாதிக்கரனோடு ஓடிப்போய் நம்ம சாதிக்கவுரவத்தை கெடுத்தவளுக்கு இதுதான் மரியாதை என்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள். அன்று முதல் இன்று வரை அந்த முத்தாலம்மன் இன்னும் கட்டையால் அடிபட்டு செத்துக்கொண்டிருக்கிறாள். இப்போது அப்பகுதிக்கு போனாலும் இதை பார்க்கலாம். அடித்து நொறுக்கி ஆற்றில் ஆற்றில் கரைத்து விடும் பழக்கமாக அது இன்னும் நீடிக்கிறது.

சாதி பெரிதில்லை தன் காதல் தான் பெரிது என்று போனவள் முத்தாலம்மன். ஆனால் காதல் பெரிதில்லை, சாதிதான் பெரிது என்று நம் சமூகம் இன்றும் அவளை போட்டு அடித்து கொண்டிருக்கிறது…..

என்ன கலாச்சாரம்டா இது....
.
.
(படித்ததில் பிடித்தது)
சாமிகளின் பிறப்பும் இறப்பும் புத்தகத்திற்க்கு நன்றி

No comments:

Post a Comment