Monday, November 9, 2015

வெள்ளை காகிதம் by க.முரளி (spark MRL K)

வெள்ளை காகிதம்

திருமண வாழ்க்கை ஒரு, 
வெள்ளைக்காகிதம்.... 
அதன் இரண்டு பக்கம், 
கணவன் மனைவி.... 

நான்... 
என் பக்கத்தில் எழுதினேன்... 
வேறொரு பெண்னை காட்டி, 
இவள் தான் என்... 
தோழி என்று...! 

அவள் தாங்கிக்கொண்டாள்...!! 

சந்தேகத்தில்... 
அவள் பக்கத்தை, 
கிழிக்க நினைத்தேன்... 
நானும் சேர்ந்து கிழிந்தேன்...!!! 

சந்தேகம் வேண்டாம்... 
நட்பு கலங்கமற்றது... 

திருமண வாழ்க்கை ஒரு, 
வெள்ளைக்காகிதம்.... 
அதன் இரண்டு பக்கம், 
கணவன் மனைவி.... 

நீ 
உன் பக்கத்தில் எழுதினால், 
அவள் தாங்கிக்கொள்வாள்... 

அவள் பக்கத்தை... 
கிழிக்க நினைத்தால்... 
நீயும் சேர்ந்து கிழிவாய்... 

By 
க.முரளி (spark MRL K)

Monday, June 30, 2014

Strive (போராடு)


real estate

இந்தியா ஒரு விவசாய நாடு...
என்பது அணைவருக்கும் தெரிந்த ஒன்று....
ஆனால் உண்மையில் இன்று....
இந்தியா ஒரு ரியல் எஸ்டேட் நாடு....
-------------
காடுகளை அழித்து
வீடுகளை கட்டுவோம்
-------------------
என்ற மோசமான திட்டத்தை..
கையில் எடுத்திருக்கும் நாம்...
உண்மையில் அங்கு வீடுகள் கட்டுகிறோமோ இல்லையோ.... இடத்தை வாங்கி போட்டு விற்றுக்கொண்டிருக்கிறோம்...
-------------
இது நீடித்தால்....
இந்த புகைப்படத்தில் இருக்கும் சாதாரண காட்சி கூட
வருங்காலத்தில் ஒரு அரிய காட்சியாக மாறிவிடும்
by
spark MRL.K ( க.முரளி)

who is the dead body (இதில் யார் பிணம் )

இன்றும் பல இடங்களில் இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது.... இறந்த மனித உடலை நடு வீட்டுல வச்சிகிட்டு இரச்சினை பண்ணுவாங்க...
============
ஒரு வேளை இறந்த உடலுக்கு, 
நடக்கும் சக்தி இருந்தால்...!!!!
தானே ஒடி போய், 
சுடுகாட்டில் படுத்துக்கொள்ளும்....!!!

by
spark MRL.K (க.முரளி)
;

Monday, June 23, 2014

who is fool

டேய் உருப்புடாதவனே... 
நீயலாம் என்னைக்கு திருந்த போற... 
உன் தம்பிய பாரு...
அண்ணன் பாரு...
அவன பாரு... 
இவன பாரு...
உன் கூட பிறந்தவங்க தான...
உன் பிரண்டு தானே.... அவன் மட்டும் எப்படி இருக்குறான்.. நல்ல சம்பாதிக்கிறான்.. நீ என்னைக்கு உருப்புட போறேன்னு....
========
மனிதனாய் அனைவரும் தன வாழ்க்கையில் ஒரு தடவையாவது கேட்கும் வார்த்தை இது....
========
ஆனால் உண்மையில் உருப்புடாதவன் யார்...?
========
பொதுவா மக்கள்கிட்ட கேட்ட சொல்லுவாங்க....
========
“நல்ல படிச்சிட்டு வேலைக்கு போகதவன்,

அவங்க அப்பா இவன் டாக்டர வரணும்னு ஆசைப்பட்டார்.. ஆனா இவன் இப்படி இருக்கான்... இந்த தொழில்ல வருமானமே வராதே... இவன் எப்படி உருப்புட போறான்..

இப்படி ஏதாவது தன்னோட லட்சியத்துக்காக பிடித்த வேலையை செய்யுறவங்க எல்லாமே... உருப்புடாதவங்கனு சொல்லுவாங்க “

இன்னும் சில பேர்... தனக்கு தானே சொல்லுவதுண்டு -
எங்க குடும்பத்துலே நான் மட்டும்தான் உருப்புடாதன்...
========
உண்மையில் யார்....???????????????
========
லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும்...
அல்லது
காசே இல்லாத ஓட்டாண்டிய இருந்தாலும்....
தனக்குன்னு ஒரு லட்சியம் இல்லாதவனே உருப்புடாதவன்....

++++++++
“லட்சங்கள் பல இருந்தாலும்
லட்சியம் இல்லாதவனே உருப்புடாதவன்”
+++++++++
by
spark MRL.K
;

education

இந்தியாவில் இன்றைய கல்விமுறை முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி முறைபடி வந்தது என்பதால் இங்கிலாந்தில் அறிமுகமான பெக்கானின் கல்வியே இன்னமும் இங்கு எச்சசொச்சமாய் தொடர்கிறது.

பெக்கான் தான் கல்வி இயல்களாகக் கூறு போட்டவர். அவரது கல்வி துறைகள், பாடப்பிரிவுகள் என குறுகியது. இன்று ஒரு தாவரவியல் ஆசிரியருக்கு வேதியியல் குறித்து எந்த கவலையும் இல்லை. வரலாறு ஆசிரியர்க்கு கணக்கு பாடம் பற்றி பிரக்ஞை இல்லை. ஒவ்வொன்றும் தனித்தனியே மூடிவைக்கப்பட்ட வடிவங்ள். இந்த நிலைக்கு பிரான்சிஸ் பெக்கானின் அறிவியல் மையக் கல்வியே காரணம்.

ஆனால் சார்லஸ் உட் வேறு சில திட்டங்களையும் முன்வைத்து அவர் எழுதுகிறார். “ நமக்கு தேவை சிந்திக்கக் கற்கும் தத்துவார்த்த மேதைகள் அல்ல.. நமது அறிவை தாண்டாமல் அடி பணிந்து உழைக்கும் சேவகர்களே நமக்கு தேவை. எனவே இந்திய கல்வி என்பது தகவல் தரும் கல்வியாக மட்டும் போதும். வேலைக் காலத்தில் தகவல் பறிமாற ஆங்கில மொழித் தேர்ச்சியும், கணக்கெழுத ஒரு கணிதமும் கருவிகளை இயக்கிட அறிவியலும் மட்டுமே தேவை. அதற்கு அழமான கல்வி உதவாது.”

1882 ல் வில்லியம் ஹன்ட்டர் என்பவரால் இந்திய கல்வி வரலாற்றில் ” இந்தியக் கல்விக்குழு (Indian Education Commission) ” என்று அழைக்கப்பட்ட முதல் கமிஷன் இங்கிலாந்து சரசால் நியமிக்கப்பட்டது. இது தொடக்கக்கல்வி குறித்து மட்டுமே ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஹன்ட்டர் லண்டனில் அளித்த பேட்டியில் “ இங்கிலாந்து பிரஜைகளுக்கும், நமது பிரித்தானிய பேரரசுக்கும் அவசியமான ராஜீய உற்பத்தி துறை சார்ந்த பலன்களை உடனடியாகப் பெற்றுத்தரும் பிரித்தானிய வேலைப் பளுவை (British Labour) குறைக்கும் ஒரு கல்வியை முன்வைப்பதே நோக்கம்” என குறிப்பிட்டார். அவரது கமிஷன் காலாண்டு தேர்வுகளை மைக்கெல்சன் விடுப்புத் தேர்வு என்றும், அரையாண்டு தேர்வை கிறிஸ்மஸ் விடுப்பு தேர்வு எனவும், முழு ஆண்டு தேர்வை கோடை விடுப்பு தேர்வு என அழைத்தது. ஆனால் விவசாய நாட்டில் பள்ளிக்கு விதிப்பிற்கு ஒரு விடுமுறை, அறுவடைக்கு ஒரு விடுமுறை, மூன்று போகத்திற்கு ஒரு விடுமுறை அல்லவா விட்டிருக்க வேண்டும்...

நமது கல்வி வெறும் மனப்பாடம் செய்வதையும், அவ்வாறு செய்வதை தேர்வில் அப்படியே கொட்டி தீர்க்கவும் திரும்ப திரும்ப நிகழும் செயல்பாடு, வாழ்வின் அன்றாட செயல்பாடுகளில் பாடப்பொருளைக் கற்றல் அடிப்படையில் செயல்படுத்த விடாமல் தற்கால நினைவாற்றல் (Instant – Memory) தகுந்த கால நீட்டிப்பு இன்றி தேர்வு முடிந்த கையோடு மறக்க வைக்கிறது.

சி.வி.ராமனுக்கு பிறகு ஒரு நோபல் விஞ்சானியை நமது கல்வியால் உருவாக்க முடியவில்லை. உலக அளவில் பெருத்த லஞ்ச ஊழல் சாப்ரஜ்யமாகப் புழுத்துப் போன நமது கல்வி வருடம் ஒன்றிற்கு பல்லாயிரம் பி.எச்.டி களைப் போலியாக உருவாக்குவதை காணலாம்.

இந்த கல்வி பிள்கேட்ஸ்களை உருவாக்கத் தவறிவிட்டது. பில்கேட்ஸின் வேலையாட்களைத் தான் உருவாக்கி கொண்டிருக்கிறது....
;
(படித்ததில் பிடித்தது

English medium ஆங்கில வழி கல்வி

உலகமெங்கும் பள்ளிக்கூடம் (School) என்னும் அமைப்பு உருவாக்கி 200 வருடங்களே ஆகின்றன. பள்ளி என்ற சொல் நமக்கு சமணர் வழியே வந்தது என்பதே உண்மையாகும். அதனால் தான் இன்றும் தமிழகத்தில் பள்ளி, பட்டி என முடியும் ஊர்கள் எல்லாம் சமணர்கள் வாழ்ந்த பகுதியாக நாம் அடையாளம் காணலாம்.

நமது வகுப்பறையின் பிறப்பு எகிப்தில் நிகழ்ந்ததாகப் பெரும்பாலான வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். அது பிளாட்டோ, அரிஸ்டாட்டிலுக்கு முற்பட்டது. கி.மு. 2000. எனவே எகிப்தின் பிரமிடுகளை போல அது பழமையானது.

இன்றைய நமது கல்வி முறை பற்றி பார்ப்போம்...
===========================================

இன்னு மக்களிடையே ஆங்கில வழிக்கல்வி அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது... அதன் பின்னணி எத்தனை பேருக்கு தெரியும்.

ஆரம்பத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் ரயில் போக்குவரத்து, சாலை, கப்பல் போக்குவரத்துகளின் அறிமுகப்படுத்தினர். இது நமது மக்களுக்காக சேவை செய்ய தொடங்கியவை அல்ல... அவை நமது நாட்டில் உள்ள காடுகளில், நிலங்களில் உள்ள செல்வத்தை மொத்தமாக எடுத்து செல்வதற்காக போடப்பட்டவை.

அதில் வேலை செய்ய உள்ளூர் மொழி தெரிந்த அதே சமயம் ஆங்கிலேய அதிகாரியிடம் சரளமாக கருத்து பரிமாற்ற ஆங்கிலம் தெரிந்த ஆட்கள் வேலைக்கு தேவைப்பட்டனர்.
இந்த பணியிடமே நிறைய தேவைபட்டியல்களில் இடம் பிடித்தது. இதற்கு “எழுத்தர்” என்றே பெயர். அதோடு ஒரு “கணக்கர்” தேவையாக 1870ல் பிரித்தானிய அரசுக்கு லட்சக்கணக்கில் ஆட்கள் தேவைப்பட்டனர். எனவே அவர்கள் ஆங்கில வழி கல்வியை முன் வைத்தனர்.

தங்களது தாய்மொழி கல்வி தேவை என்ற போதிலும்... ஆங்கில கல்வி மூலம் வெளியே பணியிடம் சென்ற இந்தியர்களின் வாழ்நிலை அரசு ஊழியர் அந்தஸ்து உயர்த்தி இருந்தது என்பது ஆங்கில வழிக் கல்வியை இங்கு மேலும் வேரூன்றிட வைத்து..

இதுவே ஆங்கில வழி கல்வி இங்கு பரவிட பெரிய காரணம்... மேலும் அவர்கள் நமது கல்வி முறையில் கொண்டுவந்த சூழ்ச்சியை பற்றி பின்வரும் நாட்களில் பார்ப்போம்...
......
(படித்ததில் பிடித்தது)