இந்தியாவில் இன்றைய கல்விமுறை முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி முறைபடி வந்தது என்பதால் இங்கிலாந்தில் அறிமுகமான பெக்கானின் கல்வியே இன்னமும் இங்கு எச்சசொச்சமாய் தொடர்கிறது.
பெக்கான் தான் கல்வி இயல்களாகக் கூறு போட்டவர். அவரது கல்வி துறைகள், பாடப்பிரிவுகள் என குறுகியது. இன்று ஒரு தாவரவியல் ஆசிரியருக்கு வேதியியல் குறித்து எந்த கவலையும் இல்லை. வரலாறு ஆசிரியர்க்கு கணக்கு பாடம் பற்றி பிரக்ஞை இல்லை. ஒவ்வொன்றும் தனித்தனியே மூடிவைக்கப்பட்ட வடிவங்ள். இந்த நிலைக்கு பிரான்சிஸ் பெக்கானின் அறிவியல் மையக் கல்வியே காரணம்.
ஆனால் சார்லஸ் உட் வேறு சில திட்டங்களையும் முன்வைத்து அவர் எழுதுகிறார். “ நமக்கு தேவை சிந்திக்கக் கற்கும் தத்துவார்த்த மேதைகள் அல்ல.. நமது அறிவை தாண்டாமல் அடி பணிந்து உழைக்கும் சேவகர்களே நமக்கு தேவை. எனவே இந்திய கல்வி என்பது தகவல் தரும் கல்வியாக மட்டும் போதும். வேலைக் காலத்தில் தகவல் பறிமாற ஆங்கில மொழித் தேர்ச்சியும், கணக்கெழுத ஒரு கணிதமும் கருவிகளை இயக்கிட அறிவியலும் மட்டுமே தேவை. அதற்கு அழமான கல்வி உதவாது.”
1882 ல் வில்லியம் ஹன்ட்டர் என்பவரால் இந்திய கல்வி வரலாற்றில் ” இந்தியக் கல்விக்குழு (Indian Education Commission) ” என்று அழைக்கப்பட்ட முதல் கமிஷன் இங்கிலாந்து சரசால் நியமிக்கப்பட்டது. இது தொடக்கக்கல்வி குறித்து மட்டுமே ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஹன்ட்டர் லண்டனில் அளித்த பேட்டியில் “ இங்கிலாந்து பிரஜைகளுக்கும், நமது பிரித்தானிய பேரரசுக்கும் அவசியமான ராஜீய உற்பத்தி துறை சார்ந்த பலன்களை உடனடியாகப் பெற்றுத்தரும் பிரித்தானிய வேலைப் பளுவை (British Labour) குறைக்கும் ஒரு கல்வியை முன்வைப்பதே நோக்கம்” என குறிப்பிட்டார். அவரது கமிஷன் காலாண்டு தேர்வுகளை மைக்கெல்சன் விடுப்புத் தேர்வு என்றும், அரையாண்டு தேர்வை கிறிஸ்மஸ் விடுப்பு தேர்வு எனவும், முழு ஆண்டு தேர்வை கோடை விடுப்பு தேர்வு என அழைத்தது. ஆனால் விவசாய நாட்டில் பள்ளிக்கு விதிப்பிற்கு ஒரு விடுமுறை, அறுவடைக்கு ஒரு விடுமுறை, மூன்று போகத்திற்கு ஒரு விடுமுறை அல்லவா விட்டிருக்க வேண்டும்...
நமது கல்வி வெறும் மனப்பாடம் செய்வதையும், அவ்வாறு செய்வதை தேர்வில் அப்படியே கொட்டி தீர்க்கவும் திரும்ப திரும்ப நிகழும் செயல்பாடு, வாழ்வின் அன்றாட செயல்பாடுகளில் பாடப்பொருளைக் கற்றல் அடிப்படையில் செயல்படுத்த விடாமல் தற்கால நினைவாற்றல் (Instant – Memory) தகுந்த கால நீட்டிப்பு இன்றி தேர்வு முடிந்த கையோடு மறக்க வைக்கிறது.
சி.வி.ராமனுக்கு பிறகு ஒரு நோபல் விஞ்சானியை நமது கல்வியால் உருவாக்க முடியவில்லை. உலக அளவில் பெருத்த லஞ்ச ஊழல் சாப்ரஜ்யமாகப் புழுத்துப் போன நமது கல்வி வருடம் ஒன்றிற்கு பல்லாயிரம் பி.எச்.டி களைப் போலியாக உருவாக்குவதை காணலாம்.
இந்த கல்வி பிள்கேட்ஸ்களை உருவாக்கத் தவறிவிட்டது. பில்கேட்ஸின் வேலையாட்களைத் தான் உருவாக்கி கொண்டிருக்கிறது....
;
(படித்ததில் பிடித்தது

No comments:
Post a Comment