Monday, June 23, 2014

today education System

ஒரு காட்டில் சில மிருகங்கள் ஒரு பள்ளிகூடத்தை தொடங்க முடிவு செய்தன. அதில் ஒரு பறவையும், ஒரு அணிலும், ஒரு மீனும், ஒரு நாயும், ஒரு முயலும், மூளைவளர்ச்சி குன்றிய ஒரு விலாங்கு மீனும் மாணவர்களாக சேர்ந்தனர். 

ஒரு குழுக்கூட்டம் கூடி அந்தப் பள்ளியில் ஒரு பரந்த அடிப்படைக் கொண்ட கல்வியை தரும் நோக்கத்தில், பாடத்திட்டத்தில் பறத்தலையும், மரமேறுதலையும், நீந்துதலையும், நிலத்தில் வளை தோண்டுதலையும் சேர்ப்பதென முடிவெடுக்கப்பட்டது. இதன்படி எல்லா மிருகமும் எல்லாப் பாடத்ததையும் படிக்க வேண்டும்.

பறவையோ பறப்பதில் மிகச்சிறப்பாக தனது திறமையை காட்டி உயர்ந்த மதிப்பெண் பெற்றது. ஆனால் வளை தோண்டுவதைப் பொறுத்தவரை அது தனது அலகையும், சிறகளையும் உடைத்துக் கொண்டு பின்வாங்க ஆரம்பித்தது. அதனால் அது மிக விரைவிலேயே பறப்பதிலும் மோசமான மட்திப்பெண் பெற ஆரப்பித்தது. மரமேறுவதிலும், நீந்துவதிலும் அது பெற்றதெல்லாம வெறும் பூஜியம் தான்.

அணிலோ மரமேறுவதில் சூரப்புலியானதால் அதில் நல்ல மதிப்பெண் பெற்று வந்தது. இருந்தாலும் நீந்துவதில் தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது. மீன் நீந்துவதில் மிகச் சிறப்பாக செய்தாலும் நீரை வெளியே வர இயலாதுபோகவே மற்றபாடத்தில் எல்லாம் பூஜியத்தை பெற்றது.

நாய் மட்டும் பள்ளிக்கூடத்தில் சேரவில்லை. அது கட்டணம் கட்டுவதையும் நிறுத்திக்கொண்டது. அது பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக குரைத்தலையும் சேர்க்கவேண்டும் என்று நிர்வாகத்திடம் தொடர்ந்து தகராறு செய்து கொண்டிருந்தது. முயலுக்கு வளைதோண்டுதலில் நல்ல மதிப்பெண் கிடைத்டாலும், அதுக்கு மரமேறுவது என்னவோ உண்மையில் ஒரு பிரச்சினையாகவே இருந்தது. ஒவ்வொரு முறை மரமேற முயலும் போதும் தலைகுப்பற கீழே விழுந்து மூளை பாதிப்படைந்தது. விரைவிலேயே வளை தோண்டுவதை கூட சரியாக செய்ய இயலாதவாறு போனதால், அதில் கூட பூஜியத்தையே மதிப்பெண்ணாகப் பெற்றது.

மூளை வளர்ச்சி குன்றிய விலாங்கு மீன் மட்டும் எல்லா பாடத்தையும் அரைகுறையாக செய்து சாராசரி மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றது. இதுவா பரந்த அடிப்படை கொண்ட கல்வி..? இல்லவே இல்லை...

இவ்வுலகில் பிறந்த அணைவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறது.. அதில் நாம் முயற்ச்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்... அத விட்டுட்டு இந்த பாடத்தை படிதால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், இதுலதான் நல்ல ஸ்கோப் இருக்குனு எல்லாரும் சொல்லுராங்கனு படிச்சா... அது உங்க அறியாமையே தவிர.. அறிவு சார்ந்த விசயம் கிடையாது...

நாம் அறிவிற்கும், ஞானத்திற்க்கும் போட்டியிட வேண்டுமே தவிர மதிப்பெண்களுக்கு அல்ல. மக்கள் மனப்பாடம் செய்யும் திறமையோடு கல்வியை ஒப்பிட்டு குழப்பி கொள்கிறார்கள். எனவே நமக்குள் என்ன திறமை இருக்குனு அறிந்து அதில் முன்னேற வேண்டும்....
-----------------------------
[அறிபாமை வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான்...
ஆனால்..
அறிந்து கொள்ள விருப்பமில்லாமை
அதைவிடப் பெரிய வெட்கக்கேடாகும்

-பெனமின் பிரான்க்லின்]
------------------------------
.
(படித்ததில் பிடித்தது)

1 comment:

  1. Nice Article Murali..Continue your job....change the bgcolor black to someother

    ReplyDelete