Monday, June 23, 2014

wilma rudolph

வில்மா ருடால்ப் கதை
-----------------------------------

வில்மா ருடால்ஃப் டென்னிஸியில் June 23,1940-ல் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். நான்கு வயதில் அவருக்கு ஸ்கார்லட் ஜுரத்தோடு இரட்டை நிமோனியா (ஜன்னி) வந்தது. இது ஒரு அவரை இளம்பிள்ளை வாதத்தில் முடக்கி விட்டது. அதனால் அவர் காலுறை பட்டைகளை அணிய வேண்டியதாயிற்று. டாக்டர் வில்மாவிடம் ஒரு போதும் தரையில் பாதங்களை வைக்க முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் அவரது தாயார் அவரை ஊக்கப்படுத்தினார்.

அவரது தாயர் வில்மாவிடம் ”திறமையும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் இருந்தால் நீ எதை விரும்புகிறாயோ... அதை உன்னால் அடையமுடியும் என்றார்.” அதற்க்கு வில்மா, “ இந்த உலகிலேயே தடகளத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய பெண்ணாக விரும்புகிறேன்” என்று சொன்னார்.

தனது ஒன்பதாவது வயதில் டாக்டர் ஆலோசனைக்கு எதிராக அவர் தனது கால்பட்டையை விலக்கி விட்டார். டாக்டர்கள் அவரால் ஒரு போதும் தரையின் மேல் கால்களை பதிக்க இயலாது என்று சொன்னதற்கு மாறாகத் தனது முதல் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் கடைசியாகவே வந்தார். பிறகு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டார். ஆனாலும் கடைசியிலேயே வந்து கொண்டிருந்தார். அவர் முதலாவதாக வரும் நாள் வரும் வரை.

தனது 15வது வயதில் அவர் டென்னிஸி ஸ்டேட் பல்கலைக்கழகதிற்கு சென்றார். அங்கே எட் டெம்பிள் என்ற ஒரு பயிற்ச்சியாளரை சந்தித்தார். அவரிடம் வில்மா, “ இந்த உலகிலேயே தடகளத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய பெண்ணாக விரும்புகிறேன்” என்று தன் விருப்பத்தை சொன்னார். அதற்கு அவர் “உனக்கு இத்தகைய தன்னம்பிக்கை உணர்வு இருப்பதால் உன்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் நான் உனக்கு உதவி செய்கிறேன்” என்று பதிலளித்தார்.

ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொள்ளும் நாள் வந்தது. ஜுட்டா ஹெய்ன் என்ற யாராலும் தோற்க்கடிக்கபடாத பெண்ணிற்க்கு எதிராக வில்மா நிறுத்தப்பட்டார். முதல் நிகழ்ச்சி 100 மீட்டர் ஓட்டப் பந்தயமாகும். அதில் வில்மா, ஜுட்டா ஹெய்னைத் தோற்கடித்து தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். இரண்டாவது நிகழ்ச்சி 200 மீட்டர் ஓட்டப்பந்தயமாகும். அதிலும் வில்மா, ஜுட்டாவை வென்று தனது 2வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

மூன்றாவது 400 மீட்டர் தொடர் (ரிலே) ஓட்டமாகும். இந்த முறையும் ஜுட்டாவிற்கு எதிராக நிறுத்தப்பட்டர். ரிலேயில் மிக வேகமாக ஓடும் நபரே எப்போதும் கடைசி சுற்றில் ஓடுவார். இவர்கள் இருவரும் தங்கள் அணியை தாங்கும் நிலையில் இருந்தார்கள். முதல் 3 பேர் ஓடினார்கள். அவர்கள் வெகு சுலபமாகக் கோலை மற்றிக் கொண்டார்கள். வில்மாவின் முறை வந்ததும் அவர் கோலை தவற விட்டார். ஆனால் வில்மா அடுத்த முனையிலிருந்து ஜுட்ட வெகுவேகமாக பாய்ந்து செல்வதை பார்த்தார். கோலை எடுத்தார். ஓர் இயந்த்ரம் போல் ஓடினார். ஜுட்டாவை மூன்றாவது முறையாக வென்று மூன்றாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அது ஒரு வரலாறு ஆயிற்று. அந்த முடமான பெண் 1960 ஒலிம்பிக்கில் உலகிலேயே மிக வேகமாக ஓடும் பெண்ணாக ஆனார்.
.
.
(படித்ததில் பிடித்தது)
.

No comments:

Post a Comment