Monday, June 23, 2014

how to win

ஒரு நாள் காது சற்று கேளாத நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது ஆசிரியர் எழுதி கொடுத்த குறிப்புடன் வீடு திரும்பினான். அவனது தாய்க்காக எழுதப்பட்ட அந்த குறிப்பில் “உங்களது டாம் படிப்பதற்க்கு லாயக்கற்றவன், அவனை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதியிருந்தது. அதை பார்த்தய அவனது தாய் “என் டாம் ஒன்றும் முட்டாளில்லை. அவனுக்கு நானே கற்பிக்கிறேன்.” என்று பதிலளித்தார். அந்த டாம் தான் பின்னாளில் உலக புகழ் பெற்ற தாமஸ் எடிசன் ஆனான். தாமஸ் எடிசன் வெறும் மூன்று மாத பள்ளி படிப்பை பெற்றவர் தான். மேலும் அவர் பாதி காது கேக்காதவர்.

1914ல் தனது 67 வது வயதில், தாமஸ் எடிசன் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள தனது தொழிற்சாலையை தீயில் இழந்தார். அதற்கு அவர் சிறிதளவே காப்பீடு செய்திருந்தார். வயதான மனிதரான எடிசன் தனது வாழ்நாள் முயற்ச்சியெல்லாம் தீயில் பொசுங்கிப் போவதை பார்த்துக்கொண்டே,” அழிவில் பெரு நன்மை இருக்கிறது. நமது எல்லாத் தவறுகளும்பொசுங்கி போய் விட்டன. இனி நான் புதிதாக எதையும் தொடங்கலாம், நன்றி ஆண்டவனே!” என்று சொன்னார். பேரிழப்பு ஏற்பட்டாலும் கூட மூன்று வாரங்களுக்கு பிறகு அவர் ஒலிப்பதிவு கருவியை கண்டுபிடித்தார்...

தாமஸ் எடிசன் லைட் பல்பை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட 10,000 தடவைகள் தோல்வியடைந்தார்...

ஒரு மனிதனின் வெற்றிக்கு...
அவன் உடல் ஊனமோ...
அவன் முயற்சியில் ஏற்படும் தோல்வியோ...
அவன் தொழிலில் ஏற்படும் நஷ்டமோ...
ஒரு பெரிய தடையே இல்லை...

தடைகள் பல இந்தால் தான் நாம் செய்யும் செயலின் வெற்றிக்கு பின்னால் ஒரு சிறந்த அனுபவம் இருக்கும்...

“ ஓர் ஆரவாரமற்ற சீரான கடல் ஒரு போதும் திறமை வாய்ந்த மாலுமியை உருவாக்கியதில்லை”
-என்று ஓர் ஆங்கில பழமொழி சொல்லுகிறது..
-------------------
எது அவசியமோ அதை செய்யத்தொடங்குங்கள்;
பிறகு...
எதை முடியுமோ அதைச் செய்யுங்கள்;
திடீரென்று ஒரு நாள்...
முடியாததையும் நீங்கள் செய்துகொண்டிருப்பீகள்.

-செயிண்ட் பிரான்ஸிஸ் அஃப் அஸீஸி
-------------------------
.
(படித்ததில் பிடித்தது)

No comments:

Post a Comment