Monday, June 23, 2014

think different

பொதுவா கிராமத்து பகுதியில பால் இல்லாம வெறும் தண்ணீர், சர்க்கரை, தேயிலை போட்டு, அதை கொதிக்க வச்சி குடிப்பாங்க.... நம்மல்ல தேனீர் கடைக்கு போனா... இப்பவும் பிளாக்டீனு கேட்டு வாங்கி குடிகின்ற பலக்கம் நிறை பேருக்கு இருக்கு.... 

ஆனா அதே டீல கொங்சம் ஐஸ் போட்டு.... அத ஒரு பெரிய கண்ணாடி டம்ளர்ல ஊத்தி, அதுக்கு மேல ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து... விக்குறாங்க... இது பொதுவா எல்ல கடையிலயும் கிடைக்காது... அதுக்குனு சில கடைகள் இருக்கு அங்க கிடைக்கும்.. என்ன 6 ருமாய் டீல... ஒரு ஐஸ் கட்டிய போட்டு... அதை அழக கொண்டுவந்து கொடுத்து... விலை 100 அல்லது 150 ரூபாய்னு சொல்லுவாங்க.... ஆனா அதனோ வரலாறு சற்று வித்தியாசமானது....

ரிச்சர்ட் ப்ளெச்னிட்ன் 1904 ல், செயின்ட் லூயிஸ் உலகக் கண்காட்சியில் இந்திய டீ யின் விற்பனையை மேம்படுத்த எண்ணினார். அங்கு அவரது டீ மிகவும் சூடாக இருந்ததால் யாருமே ஒரு மாதிரிக்குகூட (சாம்பில்க்குகூட) வாங்கி குடித்து பார்க்க விரும்பவில்லை. ப்ளெச்னிடென்க்கு ஒன்றுமே புரியவில்லை...

சுற்றி பார்த்தார்.. அருகில் இருந்த மற்ற எல்ல குளிர்பானங்களும் நன்றாக விற்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தார். அப்பொழுது அவருக்கு தன்னுடைய டீயையும் நன்றாக குளிர்வித்து, அதில் சர்க்கரையும் நன்றாக கலந்து விற்றால் என்ன என்ற யோசனை திடீரென்று தோன்றியது.

அப்படியே அவர் அதை செய்தார்.. மக்களும் அதை விரும்பினார்கள். அதுவே உலகிற்கு முதன்முதலில் குளிர்ந்த டீயை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியாகும்....

எதையும் சற்று மாற்றி யேசித்தால்... அதில் கிடைக்கும் வெற்றியும் சற்று வித்தியாசமாக இருக்கும்...
.
.
(படித்ததில் பிடித்தது)
.

No comments:

Post a Comment