Monday, June 23, 2014

this is also way of win

1. ரூபன் கன்ஸால்ஸ் ஒரு டென்னிஸ் வீரர். அவர் டென்னிஸ் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தார். அது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அவர் உலகப் பட்டத்திற்காக விளையாடிக் கொண்டிருந்தார். இறுதி ஆட்டத்தில், போட்டிக்கான பாயிண்டை பெறுவதற்காக ஒரு மிகப் ஷாட்.அடித்தார். நடுவரும், லைன்ஸ்மேனும் அந்த அடி மிகச் சரியானது என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவரை வெற்றியாளர் என்று அறிவித்தனர். ஆனால் கன்ஸாலஸ் சிறிது நேரம் கழித்து தயக்கத்துடன் பின்னால் திரும்பி, தன் எதிர் அணி வீரரின் கையைப் பற்றிக் குலுக்கியவாறு. ” அந்த அடி தவறானது” என்று சொன்னார். அதன் பலனாக அவர் ஆட்டத்தை இழந்தார். ஆகவே போட்டியில் தோல்வியுற்றார். இதை பார்த்த சுற்றியுள்ள எல்லோரும் வாயடைத்து நின்றனர். வெற்றி முகப்பில் உள்ள ஒருவர், அதிலும் அவருக்கு சாதயகமாகவே விளையாட்டின் அதிகாரிகள் இருந்தும், தன்னை தகுதி இழக்கச் கொண்டு தோற்பதை யார்தான் கற்பனை செய்து பார்க்க முடியும்..! அவரிடம், அவர் ஏன் அப்படி செய்தார் என்று கேட்டவுடன்.. அவர் அதற்கு “ எனது நாணயத்தை காப்பாற்றிக்கொள்ள அது ஒன்றுதான் ஓரே வழி.” என்று பதிலளித்தார்... அவர் போட்டியில் தோல்வியடைந்தார்... ஆனாலும் அவர் வெற்றியாளர்தான்....

2. ஒலிம்பிக் என்பது ஒரு வாழ்நாள் நிகழ்வாகும். லாரன்ஸ் லெமியக்ஸ் என்ற வீரர், போட்டியின் போது சிக்கலில் மாட்டிக் கொண்ட தனது சகப் போட்டியாளருக்கும் உதவுவதற்காகப் படகு போட்டியில் படகோட்டுவதை நிருத்திவிட்டார். உலகம் முழுவதும் இதனைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வெற்றிபெறும் விருப்பத்தைவிடப் பிறர் உயிரின் பாதுகாப்பிற்கான தனது முன்னுரிமை பெரியதானது. அவர் போட்டியில் வெற்றி பெறவில்லை, ஆனாலும் அவர் ஒரு மாபெரும் வெற்றியாளார் ஆனார். உலகம் முழுவதுமுள்ள அரசர்களும், அரசிகளும் அவரை கெளரவித்தார்கள். ஏனென்றால் அவர் ஒலிம்பிக்கின் உணர்வைக் காப்பாற்றிவிட்டர். 

----------
வெற்றிகளைவிடச் சில தோல்விகள்...
மிகச் சிறந்த வெற்றிகளாக இருக்கின்றன...
- மைக்கேல் டி மான்டைன்
---------
.
.
(படித்ததில் பிடித்தது)

No comments:

Post a Comment