Monday, June 23, 2014

English medium ஆங்கில வழி கல்வி

உலகமெங்கும் பள்ளிக்கூடம் (School) என்னும் அமைப்பு உருவாக்கி 200 வருடங்களே ஆகின்றன. பள்ளி என்ற சொல் நமக்கு சமணர் வழியே வந்தது என்பதே உண்மையாகும். அதனால் தான் இன்றும் தமிழகத்தில் பள்ளி, பட்டி என முடியும் ஊர்கள் எல்லாம் சமணர்கள் வாழ்ந்த பகுதியாக நாம் அடையாளம் காணலாம்.

நமது வகுப்பறையின் பிறப்பு எகிப்தில் நிகழ்ந்ததாகப் பெரும்பாலான வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். அது பிளாட்டோ, அரிஸ்டாட்டிலுக்கு முற்பட்டது. கி.மு. 2000. எனவே எகிப்தின் பிரமிடுகளை போல அது பழமையானது.

இன்றைய நமது கல்வி முறை பற்றி பார்ப்போம்...
===========================================

இன்னு மக்களிடையே ஆங்கில வழிக்கல்வி அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது... அதன் பின்னணி எத்தனை பேருக்கு தெரியும்.

ஆரம்பத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் ரயில் போக்குவரத்து, சாலை, கப்பல் போக்குவரத்துகளின் அறிமுகப்படுத்தினர். இது நமது மக்களுக்காக சேவை செய்ய தொடங்கியவை அல்ல... அவை நமது நாட்டில் உள்ள காடுகளில், நிலங்களில் உள்ள செல்வத்தை மொத்தமாக எடுத்து செல்வதற்காக போடப்பட்டவை.

அதில் வேலை செய்ய உள்ளூர் மொழி தெரிந்த அதே சமயம் ஆங்கிலேய அதிகாரியிடம் சரளமாக கருத்து பரிமாற்ற ஆங்கிலம் தெரிந்த ஆட்கள் வேலைக்கு தேவைப்பட்டனர்.
இந்த பணியிடமே நிறைய தேவைபட்டியல்களில் இடம் பிடித்தது. இதற்கு “எழுத்தர்” என்றே பெயர். அதோடு ஒரு “கணக்கர்” தேவையாக 1870ல் பிரித்தானிய அரசுக்கு லட்சக்கணக்கில் ஆட்கள் தேவைப்பட்டனர். எனவே அவர்கள் ஆங்கில வழி கல்வியை முன் வைத்தனர்.

தங்களது தாய்மொழி கல்வி தேவை என்ற போதிலும்... ஆங்கில கல்வி மூலம் வெளியே பணியிடம் சென்ற இந்தியர்களின் வாழ்நிலை அரசு ஊழியர் அந்தஸ்து உயர்த்தி இருந்தது என்பது ஆங்கில வழிக் கல்வியை இங்கு மேலும் வேரூன்றிட வைத்து..

இதுவே ஆங்கில வழி கல்வி இங்கு பரவிட பெரிய காரணம்... மேலும் அவர்கள் நமது கல்வி முறையில் கொண்டுவந்த சூழ்ச்சியை பற்றி பின்வரும் நாட்களில் பார்ப்போம்...
......
(படித்ததில் பிடித்தது)

No comments:

Post a Comment