Wednesday, December 25, 2013

true love story - mutha;amman



தேனி மாவட்டம் கம்பம்பகுதியில் முத்தாலம்மன் என்று ஒரு அம்மன் சாமி இருக்கிறது. இன்று பல பிரிவை சேர்ந்த மக்கள் வணங்கி வந்தாலும், குறிப்பிட்ட பிரிவின் மக்களின் சாமிதான் அது... அந்த சாமியின் வரலாறு என்ன என்று தெரியுமா...??

சில வருடங்களுக்கு முன்பு  அந்த பகுதியில் முத்தாலம்மன் என்ற பெயரில் ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அவள் அதே ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள ஒரு இளைஞனுடன் காதல் வசப்பட்டாள். பின்பு இருவரும் காதலித்து வந்தனர்.

என்றுமே காதலிப்பவர்களுக்கு சாதி என்பது கிடையாது அல்லவா..? ஊர் பெரியவர்கள் தான சாதி என்ற இழவை கட்டி கொண்டு அழுவார்கள். ஆகவே முத்தாலம்மன் ஒரு முடிவு எடுத்தாள். இருவரும் ஊரை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

பின்பு ஊர் பெரியவர்கள் அவர்களை தேடி கண்டு பிடித்து அவள் காதலனை அங்கேயே வெட்டி பலிகொடுத்தார்கள். அவளை மட்டும் ஊருக்கு இழுத்து வந்தார்கள். ஊர் எல்லையில் உள்ள குலக்கரையில் அவளை குண்டாந்தடியால் (உருட்டு கட்டையால்) அடித்தே கொன்றார்கள். ஊரே கூடி வேடிக்கை பார்த்தது. பெண்கள், குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுதார்கள். ஆனாலும் சாதி பெரியவர்களை எதிர்த்து எதுவும் பேசமுடியவில்லை.

அந்த படுகொலையை கண்ணால் கண்ட அனைவருக்கும் அன்று இரவு சரியாக தூக்கமே வரவில்லை. எனவே இதற்கு பிராயர்சித்தமாய் அந்த ஊரில் உள்ள நல்லவ்ர்கள் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்தனர். அது " முத்தலம்மனுக்கு கோவில் கட்டி சாமியாக்கி கும்பிடுவது"  ஆனால் கொல்லப்பட்ட அவளது கணவனை எல்லோரும் மறந்துவிட்டனர். காரணம் அவன் தான் தாழ்த்தப்பட்ட சாதிக்கரனாச்சே, யார் நினைக்கப்போகிறார்கள்.

ஆனாலும் சாதிபெருசுக அப்படியே முத்தாலம்மனை ஏற்றுகொள்ளாவில்லை. அவளை எப்படி கும்பிடவேண்டும் என்று ஒரு உத்தரவு போட்டனர். அதாவது ஐப்பசி மாதம் சிறிய விழாவாக எடுக்கவேண்டும். ஒரு நாள் பகல் முழுவதும் கோவிலில் வைத்து அவளை கும்பிடலாம். அன்று இரவே அச்சிலையை எடுத்து வந்து கட்டையால் அடித்து நொறுக்கிவிட வேண்டும். இதுதான் அம்மனை வழிபடும் முறை என்றார்கள்.
தாழ்ந்த சாதிக்கரனோடு ஓடிப்போய் நம்ம சாதிக்கவுரவத்தை கெடுத்தவளுக்கு இதுதான் மரியாதை என்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள். அன்று முதல் இன்று வரை அந்த முத்தாலம்மன் இன்னும் கட்டையால் அடிபட்டு செத்துக்கொண்டிருக்கிறாள். இப்போது அப்பகுதிக்கு போனாலும் இதை பார்க்கலாம். அடித்து நொறுக்கி ஆற்றில் ஆற்றில் கரைத்து விடும் பழக்கமாக அது இன்னும் நீடிக்கிறது.

சாதி பெரிதில்லை தன் காதல் தான் பெரிது என்று போனவள் முத்தாலம்மன். ஆனால் காதல் பெரிதில்லை, சாதிதான் பெரிது என்று நம் சமூகம் இன்றும் அவளை போட்டு அடித்து கொண்டிருக்கிறது…..

என்ன கலாச்சாரம்டா இது....
.
.
(படித்ததில் பிடித்தது)
சாமிகளின் பிறப்பும் இறப்பும் புத்தகத்திற்க்கு நன்றி

Sunday, December 22, 2013

madurai veeran (மதுரைவீரன்)



இன்று நாம் கடவுளாக வணங்கப்படும் மதுரைவீரன் சாமி மதுரை பக்கம் ஒரு முந்நுறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதர் தான்.

அவர் சக்கிலியர் எனப்படும் அருந்ததியர் சாதிக்காரர். சக்கிலியர் என்றால் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். கக்கூஸ் சுத்தம் செய்வது, சாக்கடை சுத்தம் செய்வது, நாம் இருந்து வைக்கும் மலத்தை அள்ளிக்கொண்டு ஊருக்கு வெளியே கொட்டுவது, செருப்பு தைப்பது, சுடுகாட்டில் பிணம் எரிப்பது போன்ற வேளைகள் அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளன.

மிகமிக முக்கியமான வேளையை செய்கிறவர்கள் இவர்கள் தான். ஆனால் இவர்களை நாம் மதிப்பதில்லை. அடுத்தவர் இருந்து வைக்கும் அசிங்கத்தில் நாம் தெரியாமல் காலை வைத்துவிடால் அச்சச்சோ என்று ஓடிப்போய் காலை கழுவிடுறோம். ஆனால் ஊரார் எல்லாருடைய மலத்தையும் சுத்தம் செய்கிற இவர்கள் உண்மையில் எவ்வளவு பெரிய மனசுக்காரர்கள்..! நாம் மாட்டேன் போ என்று இவர்கள் சொல்லிவிட்டால் என்ன ஆகும்.. ஊரே நாறிப்போகுமல்லவா..? அப்படிபட்ட புனிதமான வேளை செய்யும் இவர்களை... சிறு வயதில் நமக்கு ஆய் கழுவி சுத்தம் செய்கிற அம்மா மாதிரியான இவர்களை... சாதி என்ற பெயரை சொல்லி கிழே வைத்திருக்கிறோம். எவ்வளவு மோசமான மனிதர்கள் நாம்.? இந்த கக்கூஸ் கழுவும் வேளை கூட சில நூறூ ஆண்டுகளுக்கு முன் இவர்கள் மீது கட்டாயமாக திணிக்கப்பட்டவைதான்.. பிறப்பில் அனைவரும் மனிதன் தான்.. அதை முதலில் புறிந்து கொள்ள வேண்டும்...

மதுரை பக்கம் பிறந்த மதுரைவீரன் உண்மையில் பெரிய வீரன் தான். நாட்டுக்கு பாதுகாப்பாக இருந்தான். அப்போது மதுரை மன்னர் திருமலையின் மகள் பொம்மி மதுரைவீரன் மீது காதல் கொண்டாள். அவளது காதலுக்கு மதுரைவீரனும் சரி என சொல்ல இரண்டுபேரும் கல்யாணம் செய்து கொண்டார்கள். இப்படி ஒரு கீழ் சாதிக்காரன் கல்யாணம் செய்து விட்டானே என்று மேல்சாதிக்காரர்களுக்கு கோபம். அதனால் அவனை பிடித்து கொலை செய்து விட்டனர். பிடித்து போய் கல்யாணம். செய்வது என்ன தப்பா..? ஆனால் அன்று போலிஸ் ஸ்டேசன்,சட்டம், நீதி எல்லாமே மன்னர்கள் தான். மன்னனை மீறி அன்று ஒன்றும் செய்யமுடியாது. எதிர்த்து பேசினால் வெட்டிபோடுவான். ஆகவே மக்கள் யோசித்தனர். மதுரைவீரனை ஒரு சாமியாக்கி கும்பிட ஆரம்பித்தனார். மன்னனால் இப்போது என்ன சொல்ல முடியும்.? சாமி கும்பிடுவதை தடுத்தால் அது சாமி குத்தம் ஆகிடும். அவர்களின் எதிர்ப்பை அன்று அப்படிதான் காட்டமுடிந்தது. பிற்காலத்தில் மக்கள் அனைவராலும் வணங்கப்பட்து...

காதலிப்பது குற்றம் அல்ல... கலப்புதிருமணத்தை ஆதரிப்போம்....
.
.
(படித்ததில் பிடித்தது)

Wednesday, December 4, 2013

vanayakar vazipadu (வாதாபி கணபதி)

பரஞ்தோதி என்னும் பல்லவ படைத்தலைவன், வாதாபி நாட்டின் மீது படையெடுத்து சென்று, அந்நகரை வென்றான். அப்பொழுது அங்கு மனித உடலுடனும், யானை தலையுடனும் கூடிய உருவசிலையை கண்டான். அதிசயித்தான். அச்சிலையை ஒரு அதிசய பொருளாக தமியகத்திற்க்கு கொண்டுவந்தான். அதன்பின் அச்சிலைக்கு வினாயகர் என பெயர் சூட்டி தமிழகத்திலும் வணங்கத் தலைப்பட்டனர். "வாதாபி கணபதி" என்று வினாயகரை வழிபடுவதே அதற்கு போதிய ஆதாரமாகும்.

அதே போல் நாம் வழிபடும் முருகன் முதலில் தமிழகத்தில் மட்டும் கடவுளாக வழிபடபட்டது. அதனால் தான் முருகனை தமிழ் கடவுள் என்று சொல்லுகிறோம். பின்பு இங்குள்ள மன்னர்கள் வடக்கே படையெடுத்து சென்றாதால் காலப்போக்கில் அங்கு முருகன் வழிபாடு வர ஆரம்பித்தது. இப்படி இருக்கும் போது இருவரும் எப்படி அண்ணன் தம்பி ஆக முடியும்.. அதன் எழுதப்பாட்ட கதைகளில் இவர்கள் அண்ணன் தம்பி என உரவு கற்பிக்கப்பட்டு எழுதியதால் அப்படி ஆனது.

அடுத்தது தமிழகத்தில் இருப்பவர்கள் வினாயகர் கல்யாணம் ஆகாத கடவுள்னு சொல்லுறாங்க. ஆனா வடக்கே இரண்டு மனைவி இருக்குனு சொல்லுறாங்க. ஒருவேலை பல்லவ படைத்தலைவன் பரஞ்சோதி வரும்பொழுது அதன் அருகில் இருந்த இரண்டு மனைவி சிலையை எடுக்காமல் வந்திருப்பார்னு நினைக்கிறேன்.பாவம் வினாயகர் இங்கு மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

ஒவ்வொரு பகுதியிலும் வாழ்ந்த மக்கள் தங்கள் தங்கள் விருப்பத்திற்க்கும், இயல்பிற்க்கும், சூழ்நிலைக்கும், பழக்கவழக்கத்திற்க்கும் ஏற்ப்ப கடவுளை உவருவாக்கினர். அவற்றையே வழிபட்டார். முரட்டுத்தனமான இயல்பும், மாமிசம் உண்ணும் பழக்கம் உள்ள மக்கள் அதற்கேற்பக் கடவுளை உருவாக்கினர். அவைகளுக்கு கத்தி, வேல், வாள், சூலம் முதலிய ஆயுதங்களை அணிவித்து மாமிசம் வைத்துப் படைத்து வழிபட்டனர். சாந்தகுணமுள்ளவர்கள், மாமிசம் உண்ணாதவர்கள் அதற்கேற்ப தங்கள் கடவுளை உருவாக்கி வழிபட்டனர்.

(படித்ததில் பிடித்தது)

Saturday, November 23, 2013

monkey- குரங்கு

நாம் சிறு வயதிலிருந்தே இதை பார்த்திருக்கிறோம்.. ஒரு குரங்கு கண்ணை மூடி இருக்கும்.. மற்றொன்று வாயையும்.. இன்னொன்று காதுகளையும் மூடியவாரு இருக்கும்.. அதாவது கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என்பதுதான் இதன் பொருள்.. ஆனால் உண்மையில் இதில் மூன்று குரங்குகள் மட்டும் இடம்பெறவில்லை.. நான்காவது ஒரு குரங்கு உண்டு. ஆனால் அது ஏதோ நாகரிகம் கருதி இன்று மறைக்கப்பட்டுள்ளது.

நான்காவது குரங்கு தன் பிறப்புறுப்பை மூடியவாறு இருக்கும். இவை ஜப்பானில் உள்ள "தோஷோகோ" என்ற விஹாரையின் மரக்கதவில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்திலிருந்து உலகம் எங்கும் பரவியது.
இதன் ஆதி ஊற்று "கன்புஸியஸ்" காலத்தது. சீனாவில் இருந்து புறப்பட்டது என்கிறார்கள்.

1. கண்களை மூடும் குரங்கின் பெயர் "மிஸாரு"
2. காதுகளை மூடும் குரங்கின் பெயர் "கிகாஸாரு"
3. வாயை மூடும் குரங்கின் பெயர் "இவாஸாரு"
4. பிறப்புறுப்பை மூடும் குரங்கின் பெயர் "ஷிஸாரு"

நாகரீகம் கருதி இதை மறைக்காமல் இருந்திருந்தால்.. ஒருவேளை எய்ட்ஸ் போன்ற நோய் ஒன்று வராமலேயே இருந்திருக்கும்...!!!

(படித்ததில் பிடித்தது)
.

Thursday, October 17, 2013

ஆடு மாடுகளை கடவுளுக்கு பலியிடும் முறை


ஆடு மாடுகளை கடவுளுக்கு பலியிடும் முறை எப்படி தோன்றியது...??
poo
நாம் குரங்குகளாக ஒரு காலத்தில் காட்டில் அலைந்து கொண்டிருந்தோம். முன்னங்கால்களை தூக்கிப் பிறகு நட்டமாக நடக்கத் துவங்கினோம். முன்னங்கால்கள் இரண்டும் பிறகு கைகளாகிக் கீழே தொங்கின. கைகளே இல்லாத காலத்தில் கையெடுத்து கும்பிட சாமிகளும் பூமியில் இல்லை. சாமியில்லாத பூமியில் ரொம்ப காலம் மனிதர்கள் வாழ்ந்தார்கள். பின்னர் கூட்டம் கூட்டமாக இனக்குழுக்களாக வாழத் துவங்கினார்கள்.

வேட்டையாடிச் சாப்பிட்ட காலம் அது. மனித மூளை இப்போது இருப்பது போல அவ்வளவு சுறுசுறுப்பாகவும் கூர்மையாகவும் வளர்ச்சி பெறாத காலம். கைகளை பயன்படுத்தி மனிதன் உழைக்கத் துவங்கினான், கைகளின் உழைப்பால் நரம்பு மண்டலத்தின் தலைமைச் செயலகமான மூளை என்கின்ற உறுப்பு உருவானது. இயற்கையோடு இயற்க்கையாக மனிதர்கள் வாழ்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை சுற்றி நடப்பதை கவனிக்கத் துவங்கினார்கள். மெல்ல மெல்ல மூளை வேலை செய்கிறது. சிந்தனை, உணர்வு எல்லாம் வளர்கிறது.

அப்போது காடுகளில் மலைகளில் நீர் கிடைக்கும் இடங்களை சுற்றித்தான் வாழ்க்கை. பூச்சிக்கடிகளுக்கு நடுவே அப்பாவிகளாக மனித வாழ்க்கை துளிர் விட்டது. அந்த காடு திடீரென தீப்பற்றி எரியும். விலங்குகளும் மனிதர்களும் பதறி ஓடுவார்கள். மின்னல் வெட்டியதால் தீப்பிடித்தது. மின்னல் மேலே வானத்திலிருந்து வந்தது. நாள் கணக்கில் காடுகள் எரிந்துகொண்டே இருக்கும். மனிதர்களால் காட்டுத்தீயை அணைக்க முடியுமா..? அதுவும் அந்தகாலத்தில். பின்னர் இடிச்சத்தம் கேட்கும். அதுவும் மேலேதான். மழை பெய்யும். பல நாள் விடாமல் பெய்யும் மழையில் தான் காட்டு தீ அணையும். மழையும் மேலே இருந்துதான் வந்தது. பகலில் சூரியன் சுட்டெரிக்கிறது. அதுவும் மேலேதான் இருக்கிறது. இரவில் நிலா ஒளி தருகிறது. அதுவும் மேலேதான் இருக்கிறது.

நல்லது கெட்டது எல்லாமே மேலே இருந்துதான் வருகிறது என்று அன்றைய மனிதன் நினைத்தான். ஆகவே மேலே ஏதோ சக்தி இருப்பதாக அவன் கற்பனை செய்தான். அன்றைய மனிதர்கள் அந்த சக்தியை சமாதானப்படுத்தி நல்லதை மட்டும் கீழே அனுபினால் போதும் என்று சொல்ல ஆசைப்பட்டர்கள். சமாதனப்படுத்துவது எப்படி என்பது அடுத்த பிரச்சினை. அன்றை மனிதர்கள் மிருகங்களை சாமாதனப்படுத்த தங்களிடம் இருந்த ஆடு மாடுகளை தூக்கி போடுவார்கள். அந்த மிருகம் ஆடுமாடுகளை தின்று சமாதானமாகி விடும்.

அதே பாணியில் மேலே இருக்கும் சக்தியை சமாதானப்படுத்த ஆடுகளை தூக்கி கொண்டு உயரமான மலை உச்சிகளுக்குப் போனார்கள். உலகமெங்கும் மலைகளில் சாமி கோவில்கள் இருப்பதன் ரகசியம் புரிகிறதா..? ஆனால் மலைக்குப் போனாலும் வானம் எட்டவில்லை. என்னடா செய்யிறது என்று மலையில் நின்று யேசித்தார்கள். காடுகள் எரிந்து புகை மேலே போவதைப் பார்த்தார்கள். ஆகவே ஆடு மாடுகளை தீயில் போட்டு எரித்தார்கள். அதன் புகை மேலே வானத்துக்கு போனது. சரி மேலே உள்ள சக்தி சமாதானமாகி நல்லது செய்யும் என்று இவர்கள் சமாதனப்படுவார்கள்.

அப்படியே நடந்து கொண்டிருந்தது. பின்னர் ஒருநாள் நீங்க அனுப்புற புகை மேலே உள்ள சக்திக்காக நீங்க அனுப்புறதுதான் என்பது அந்த சக்திக்கு எப்படி தெரியும்..? என்று ஒருவன் கேள்வியை போட்டான். மக்களுக்கு குழப்பமாகி விட்டது. அப்போ என்ன செய்யிறது..? என்று அவனிடமே கேட்டார்கள். அப்படி வாங்க வழிக்கு என்று சந்தோசத்துடன் அவன் ஒரு வழி சொன்னான். மேலே உள்ள சக்திக்கு புரிகிற மொழி எனக்கு தெரியும். நீங்க ஆடு மாடுகளை தீயில் போடும் போது நான் அந்த மொழியில் " சுக்லாம் பரதம். யதா.. ததா.. " என்று மந்திரம் சொல்லுவேன். அப்பதான் மேலே உள்ள சக்திக்கு புரியும். எனக்கு அதுக்கு உண்டான சன்மானத்தை கொடுத்தா போதும் என்று சொன்னான். ஜனங்கள் ஒப்புக்கொண்டார்கள். பிறகு மந்திரம் சொல்லி ஆடு மாடுகளை தீயிட்டுக் கொளுத்தும் சடங்காக அது மாறியது. அதற்கு யாகம் என்று பெயர் வந்தது. அந்த வழிபாட்டு முறைக்கு "பிராமண மதம்" என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது. ரொம்ப காலம் இது ஓடிக்கொண்டிருந்தது.

காலப்போக்கில் மனிதர்கள் விவசாயத்தை கண்டுபிடித்தார்கள். உண்மையில் பெண்கள் தான் விவசாயத்தை கண்டு பிடித்தார்கள். விவசாயத்தை கண்டுபிடிப்பதற்க்கு முன்னால் வேட்டையாடுதல் முடிந்து ஆடுமாடுகளை வளர்க்கும் மேய்ச்சல் காலம் இருந்தது.

விவசாயம் செய்ய ஆடுமாடுகள் ரொம்ப முக்கியமாகத் தேவைப்பட்டன. நிலத்தை உழுவதற்க்கும் தேவை. சாணம் போட்டு நிலத்தை பண்படுத்தவும் தேவை. ஆகவே அப்படி இருக்கிற ஆடுமாடுகளை எல்லாம் தீயில் போட்டு கொளுத்துகின்ற மதம் சரியில்லை. இப்போது சரிப்பட்டு வராது என்று விவசாயிகள் முடிவு செய்தார்கள்.

ஆடு மாடுகளை கொளுத்துகிற சாமி வேண்டாம். ஆடுமாடுகளை காப்பாத்துகின்ற சாமிதான் இப்போது தேவை என்று முடிவு செய்து புதுசாக சாமிகளை உண்டாக்கினார்கள்.

மேல் நாடுகளில் யேசு கிறிஸ்துவை நல்ல மேய்ப்பாளராக உருவாக்கினார்கள். நம் நாட்டில் புல்லாங்குழல் ஊதி மாடுகளை மேய்கிற கிருஷ்ண பகவானை உண்டாக்கினார்கள். இதனால் கிறிஸ்துவ மதமும் வைஷ்ணவ மதமும் தோன்றின.

By
Spark MRL.K
சாமிகளின் பிறப்பும் இறப்பும் புததகத்திற்கு (" துளிர்" அறிவியல் மாத இதழ்) எனது நன்றி...

Tuesday, October 15, 2013

dewali festival (தீபாவளி பண்டிகை)

தீபாவளி பண்டிகை..

ஆண்டிற்க்கு ஒரு முறை இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை... புதிதாக கல்யாண்ம் பன்னிக்கிட்டவங்க தலை தீபாவளி கொண்டாடுவாங்க.. சிலர் தன் சக்திக்கு மீறி கடன் வாங்கி செலவு செய்வாங்க... எங்கு பார்தாலும் பகல் முழுவதும் ஒரே வெடி சத்தம்.. இரவு முழுவதும் வான வேடிக்கை..  அன்று பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் அழுவலகம், தொழிற்சாலை என அனைத்தும் விடுமுறை.. ஆனால் இப்படிபட்ட தீபாவளி எப்படி வந்தது, ஏன் கொண்டாடுகிறோம் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்..!!!???

தீபாவளி கொண்டாடுவதற்க்கு பெரியவங்க சொல்கின்ற காரணம்... நரகாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். அவனை திருமால் அழிச்சுட்டாரு.. அவன் இறந்த நாளை நாம் கொண்டாடும் விதமாக தீபாவளி கொண்டாடுறோம்னு சொல்லுவாங்க... இததான் எல்லாரும் நம்பி கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.. ஆனாம் இது உண்மை அல்ல...!!!

தீபம்+ஆவளி = தீபாவளி

ஆவளி என்றால் வரிசை.

தீபாவளி என்றால் தீபவரிசை அல்லது விளக்கு வரிசை என்பது பொருள்.

இதில் நரகாசுரன் வதத்திற்க்கும் தீபாவளி என்ற பெயருக்கும் என்ன சம்பந்தம்.. யாரவது யோசிச்சு பர்க்கிறோம...?

சமணத் துறவி 24 வது தீர்த்தங்கரர் சீடர்களுக்கு போதித்து கொண்டிருந்த போது, விடியற்காலைப் பொழுதில் அப்படியே இறந்து போனார்.

அவரது சீடர்கள் இருபுறமும் விளக்குகளை வரிசையாக ஏற்றி, அவரை வழிபட்டனர். அதுவே தீபாவளி.

பொங்கலைச் சங்கராந்தி என்று ஆக்கியது போல, சமணப் பண்டிகையை இந்து பண்டிகை ஏன்று ஆக்கிவிட்டோம்.

சரி நரகாசுரன் என்பவன் யார்..?
அவன் இறப்பால் என்ன லாபம்..?
அதற்கு எதற்கு விழா..?

அதர்மத்தை தர்மம் அழிக்கும் என்ற தத்துவத்தை இப்பண்டிகை உணர்த்துவதாக வேண்டுமானால் கொள்ளலாம்.

அதற்குப் பண்டிகை கொண்டாடி என்ன பயன்..? இயக்கம் நடத்தி அதர்மத்தை அழித்தாலாவது சமுதாயத்திற்க்கு நலன்பயக்கும்.

அதை விட்டு விட்டு, பட்டாசு கொளுத்திப் பலகாரம் சாப்பிட்டால் சரியாய் போய்விடுமா..?
"காசை கரியாக்குதல்" என்பார்களே அதற்கு தீபாவளி தான் சரியான உதாரணம்.

இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில், அன்று பட்டாசும், வாணமும், மத்தாப்பும் கொளுத்துவதால் எந்த அளவுற்க்கு காற்று மாசுபடுகிறாது தெரியுமா..? இந்தியா பரப்பே அன்று புகை மண்டலமாக காட்சி அளிக்கும். அதனால் எவ்வளவு நோய் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் இதனால் எத்தனை தீ விபத்தி ஏற்படுகிறது..

சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் எப்படி வேண்டுமானலும் சந்தோசமாக இருக்கலாம்.. ஆனால் இப்படிதான் சந்தோசமாக இருப்பேன் என்பது தவறு. பண்டிகை என்ற ஒரு நாளை வைத்து அன்று ஒரு நாள் மட்டும் சந்தோசமாக இருப்பதை விட,  நாம் நினைத்தால் வருடம் முழுவதும் சந்தோசமாக இருக்கலாம்.

வெடி சத்தம் தான் ஒருவனுக்கு சந்தோசத்தை தருகிறது என்றால்.. நாட்டில் எல்லை பகுதியில் வெடிக்கும் வெடி சத்தமும் சந்தோசத்தை தான அளிக்க வேண்டும்.  உண்மையில் சந்தோசம் என்பது அது அல்ல...!!!
 by
spark MRL.K
அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்திற்க்கு எனது நன்றி