தீபாவளி பண்டிகை..
ஆண்டிற்க்கு ஒரு முறை இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை... புதிதாக கல்யாண்ம் பன்னிக்கிட்டவங்க தலை தீபாவளி கொண்டாடுவாங்க.. சிலர் தன் சக்திக்கு மீறி கடன் வாங்கி செலவு செய்வாங்க... எங்கு பார்தாலும் பகல் முழுவதும் ஒரே வெடி சத்தம்.. இரவு முழுவதும் வான வேடிக்கை.. அன்று பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் அழுவலகம், தொழிற்சாலை என அனைத்தும் விடுமுறை.. ஆனால் இப்படிபட்ட தீபாவளி எப்படி வந்தது, ஏன் கொண்டாடுகிறோம் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்..!!!???
தீபாவளி கொண்டாடுவதற்க்கு பெரியவங்க சொல்கின்ற காரணம்... நரகாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். அவனை திருமால் அழிச்சுட்டாரு.. அவன் இறந்த நாளை நாம் கொண்டாடும் விதமாக தீபாவளி கொண்டாடுறோம்னு சொல்லுவாங்க... இததான் எல்லாரும் நம்பி கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.. ஆனாம் இது உண்மை அல்ல...!!!
தீபம்+ஆவளி = தீபாவளி
ஆவளி என்றால் வரிசை.
தீபாவளி என்றால் தீபவரிசை அல்லது விளக்கு வரிசை என்பது பொருள்.
இதில் நரகாசுரன் வதத்திற்க்கும் தீபாவளி என்ற பெயருக்கும் என்ன சம்பந்தம்.. யாரவது யோசிச்சு பர்க்கிறோம...?
சமணத் துறவி 24 வது தீர்த்தங்கரர் சீடர்களுக்கு போதித்து கொண்டிருந்த போது, விடியற்காலைப் பொழுதில் அப்படியே இறந்து போனார்.
அவரது சீடர்கள் இருபுறமும் விளக்குகளை வரிசையாக ஏற்றி, அவரை வழிபட்டனர். அதுவே தீபாவளி.
பொங்கலைச் சங்கராந்தி என்று ஆக்கியது போல, சமணப் பண்டிகையை இந்து பண்டிகை ஏன்று ஆக்கிவிட்டோம்.
சரி நரகாசுரன் என்பவன் யார்..?
அவன் இறப்பால் என்ன லாபம்..?
அதற்கு எதற்கு விழா..?
அதர்மத்தை தர்மம் அழிக்கும் என்ற தத்துவத்தை இப்பண்டிகை உணர்த்துவதாக வேண்டுமானால் கொள்ளலாம்.
அதற்குப் பண்டிகை கொண்டாடி என்ன பயன்..? இயக்கம் நடத்தி அதர்மத்தை அழித்தாலாவது சமுதாயத்திற்க்கு நலன்பயக்கும்.
அதை விட்டு விட்டு, பட்டாசு கொளுத்திப் பலகாரம் சாப்பிட்டால் சரியாய் போய்விடுமா..?
"காசை கரியாக்குதல்" என்பார்களே அதற்கு தீபாவளி தான் சரியான உதாரணம்.
இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில், அன்று பட்டாசும், வாணமும், மத்தாப்பும் கொளுத்துவதால் எந்த அளவுற்க்கு காற்று மாசுபடுகிறாது தெரியுமா..? இந்தியா பரப்பே அன்று புகை மண்டலமாக காட்சி அளிக்கும். அதனால் எவ்வளவு நோய் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் இதனால் எத்தனை தீ விபத்தி ஏற்படுகிறது..
சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் எப்படி வேண்டுமானலும் சந்தோசமாக இருக்கலாம்.. ஆனால் இப்படிதான் சந்தோசமாக இருப்பேன் என்பது தவறு. பண்டிகை என்ற ஒரு நாளை வைத்து அன்று ஒரு நாள் மட்டும் சந்தோசமாக இருப்பதை விட,
நாம் நினைத்தால் வருடம் முழுவதும் சந்தோசமாக இருக்கலாம்.
வெடி சத்தம் தான் ஒருவனுக்கு சந்தோசத்தை தருகிறது என்றால்.. நாட்டில் எல்லை பகுதியில் வெடிக்கும் வெடி சத்தமும் சந்தோசத்தை தான அளிக்க வேண்டும். உண்மையில் சந்தோசம் என்பது அது அல்ல...!!!
by
spark MRL.K
அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்திற்க்கு எனது நன்றி
No comments:
Post a Comment