Tuesday, October 8, 2013

ghost (பேய்கள், ஆவிகள்)


பேய்கள், ஆவிகள் இருக்கா... இல்லையா...? சில அறிவியல் உண்மைகள்...
+++++++++++++++++++++++++++++++

இந்த உலகத்துல பேய் இருக்கா.. இல்லையானு பலருக்கு சந்தேகம் இருக்கு.. ஏன்னா மக்கள் அந்த அளவுக்கு பேய் மீது நம்பிக்கை வச்சிருக்காங்க..!!

பேய், ஆவி இந்த இரண்டுக்கும் வித்யாசம் இருக்கு.. அதாவது இயற்க்கையாக இறந்தவர்கள் ஆவியாகவும்... தனது விதி முடிவதற்க்குள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது கொலை செய்யபட்டோ அல்லது விபத்தில் இறந்தவர்கள் தங்கள் ஆயுள் முடியும் வரை பேயாக அலைகின்றனர் என்பது எல்லாரும் நம்பும் ஒன்று.

பேய்
====
அதாவது தற்கொலை செய்து கொள்ளுகிறாவர்கள் தங்கள் ஆயுள் முடியும் வரை பேயாக அலைவார்கள் என்றாள், அவர்கள் இந்த உலகத்தில் வாழ அயுள் இருந்தும், என்று அர்த்தமாகிறது. அனால் இந்த நேரத்தில், இந்த மரத்தில் இத்தனை இலைகள் உதிரவேண்டும் என்பது இறைவனுடைய ஆணையே. அது மட்டும் இல்ல ஒரு துரும்மு அசைந்தால் கூட அது இறைவன் செயலே.. என்று அணைத்து மதவாதிகளும் கூறுவது.  அதாவது எல்லாமே விதி படிதான் நடக்கிறாது என்பது பொருள்.

இக்கருத்துப்படி பார்பின் ஒருவன் தற்கொலை செய்து கொள்வதும் விதிபடிதான் நடக்கிறாது இல்லையா..?

ஒருவன் தற்கொலை செய்து கொண்டு இறக்க வேண்டும் என்று இறைவன் விதித்திருந்தால் தான் அவன் தற்கொலை செய்துகொள்கிறான். அப்படி இருப்பின், அன்றோடு அவன் ஆயுள் முடிய வேண்டும் என்று அவனுக்கு விதியிருக்கிறது என்று அர்தமாகிறது.

எனவே, தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு இன்னும் ஆயுள் இருப்பதாகவும், அதனால் தான் அவர்கள் ஆயுள் முடியும் வரை பேயாக அலைகிறார்கள் என்று மூட நம்பிக்கையை நம்ப முடிகிறது.

ஆவிகள்
=========
இயற்கையாக இறந்தவர்கள் ஆவியாக மாறி மேலோகத்தில் இருந்து கொண்டு நம்மை பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், முறைபடி யாகம் செய்தால் ஆவிகளுடம் பேசலாம் என்றும் நம்ம ஊர்ல பலர் புளுவிகிட்டு திரியுராங்க..

ஏங்க மறுபிறவினு ஒன்னு இருக்கு என்று   எல்லாரும் நம்புரிங்க.. அப்படி இருக்கையில் இறந்தவர்கள் அடுத்து பிறவியில் தான பிறந்திருக்க முடியும்.. அப்படி இருக்கையில் எப்படி அவர்கள் ஆவியாக மேலோகத்தில் இருக்க முடியும்.. இதிலிருந்தே தெரிய வில்லையா மறுபிறவியும் பொய், ஆவிகளும் பொய் பேய்களும்  பொய் என்று..

சில அறிவியல் விளக்கங்கள்..
================================

1. இரவு தூங்கும் போது திடிரென்று நம்மை ஏதோ ஒன்று அமுக்குவது போன்ற உண்ர்வு ஏற்படும். சமத்தில் நம்மால் புரளவும் முடியாது. கத்தவும் முடியாது. நிலைமை பரிதாபமாய் இருக்கும். சுமார் அரை நிமிட நேரம் அது நீடிக்கலாம்.
இவ்வாறு ஏற்படுவதை பேய் அமுக்குவதாகக் கருதுகின்றோம். அவ்வாறு என்னுவது தவறு மட்டுமல்ல, அறியாமையுமாகும்.

இதற்கு காரணம் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை நம் உடலில் இரத்த ஓட்டம் திடிரென்று தடைப்படும். அப்போதுதான் இந்த நிலை ஏற்படுகிறது. மீண்டும் இரத்த ஓட்டம் ஓட ஆரம்பித்ததும், நாம் துடித்துப் பிடித்து எழுந்து விடுகிறோம். அவ்வளவே.!

2. இரவு நேரத்தில் மரத்தடியில் நாம் துங்கும் போது சில சமயம் மூச்சு தினறல் ஏற்பட்டு மூச்சு விடுவதற்க்கே சிறமம் ஏற்படுகிறது... இதற்க்கு காரணமும் பேய் என்று சொல்லுகின்றனர்.
உண்மையில் அது உண்மை அல்ல.. இரவு நேரத்தில் மரங்கள் ஆக்சிஜனை உள்வாங்கி கொண்டு கார்பன் டை ஆக்சைடை அதிகமாக வெளியிடுகிறது. அதை நாம் சுவாசிக்கும் போது மூச்சு தினறல் ஏற்படுகிறது.

இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், அருகிள் உள்ள பெரியா டாக்டர்களிடம் இதை சொல்லி விசாரித்து பாருங்கள்.. உங்களுக்கே உண்மை புரியும்..!!!
===================================================

காலங்காலம நம்மை பேய் இருக்குனு பயமுறுத்துபவர்கள் சொல்லும் ஒன்று.. அங்க பேய் இருக்கு, இங்க இருக்கு, அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கனு தான் சொல்லுவாங்க... அப்படியே தான் பார்ததாக சொன்னாலும் அதை சரியான முரையில் நிறுபிக்க மாட்டார்கள்.

சிலருக்கு பேய் பிடிச்சிருக்குனு சொல்லுவதுண்டு. எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..? உண்மையில் பேய்க்கு சக்தி இருக்கு என்றாள், அதனால் ஒரு உடம்பில் இருந்து மற்றவர் உடம்பிற்க்கு மாறமுடியும் என்றால், நம்முன்னால் ஒரு மேஜிக் பண்ணி காட்ட சொல்லுங்க.

அதேமாதிரி இறந்தவர்களின் உடலை எரிக்கும் இடமான சுடுகாட்டில் பேய்கள் உலாவிக்கொண்டிருக்கிறது என்றும். இரவு அங்கு சென்றால் பேய் அடித்து விடும் என்றும் கருத்து உள்ளது. அப்படியானால் இறந்த உடலை (பினத்தை) எரிப்பவர்கள் விடிய விடிய அங்குதான் உள்ளனர். அவர்களை பேய் ஒன்றும் செய்யவில்லையே. அப்படியானால் அவர்கள் பேயோட ஃப்ரென்டா என்ன..?

பல மந்திர சக்திகளை பயன்படுத்தி பேய்களை ஏவி விடுபவர்கள்.. ஏன் அந்த மந்திர சக்திகளை பயன்படுத்தி பெரிய பணக்கரனாகியிருக்கலாம்ல. ஏன் அவர்கள் இன்னும் 100 க்கும் 500 க்கும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. சற்று சிந்தியுங்கள்..

பேய பார்ததாக கூறும் அனைவருக்குமே ஒன்று கூறிக்கொள்கிறேன். இது வெறும் உங்கள் மனதில் உள்ள குழப்பமே தவிர வேறு ஒன்றும் இல்ல. அதாவது இரவு கயிரை கண்டால் பாம்பு என்று சில சமயம் பயப்படுவோம் அல்லவா அது போலதான்.

எனவே மற்றாவர்கள் சொல்லுவதை உடனே நம்மப வேண்டாம். நம்ப வேண்டியதை நம்புங்கள். இல்லாதை தீர விசாரித்து செயல்படுங்கள். தேவையற்ற மூட நம்பிக்கைகளை ஒழிப்போம்.

அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்திற்க்கு எனது நன்றி

2 comments:

  1. dear friend enakku vaitha vali na athoda valiya ungalala eppadi unara mudiyum? ungalukkum antha anubavam varanum.so arakuraya kandathayum padichukittu ippadi thappana karutha parapaathinga..........ok?

    ReplyDelete
  2. aavigal pathi therinjukanum na 9965240149 this is my number.....any time call pannunga..............ok?

    ReplyDelete