Sunday, October 6, 2013

Real estate (ரியல் எஸ்டேட்)


ரியல் எஸ்டேட்
+++++++++++

   இன்று ஒருவன் தன் தகுதிக்கு மீறி பணத்தை சம்பாதிக்க வழி ஒன்று அரசியல் வாதியாகனும் இல்ல நிலத்தை விக்கிர தொழில் (ரியலெஸ்டேட்) செய்யனும். அதாவது நல்லா இருக்குற நிலத்துல எவ்வளவு தண்ணீரூத்தினாலும் வளராத கற்களை நட்டி, அதில் பாத்திகள் போல் பல பிளாட்டுகள் அமைத்து தொழில் செய்வது. என்ன ஒரு சின்ன வித்யாசம் விவசாயி நிலத்துல வளர்ர பயிர்களை விற்பான். இவர்கள் நிலத்தையே விற்று விடுகின்றனர்.

இதில் ஏற்படும் தீமைகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்..
========================================
1. இந்த தொழில் நடக்கும் இடம் பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் தான் நடைபெறுகிறது. பணம் வைத்திற்க்கும் முதலைகள் 10 அல்லது 20 ஏக்கர் நிலத்தை மொத்தமாக வாங்கி, அதை கூறு போட்டு விற்கின்றனர். அந்த இடத்தை இவர்களிடம் இருந்து வாங்குபர்கள் உடனே அந்த இடத்தில் வீடு கட்ட போவது இல்லை. காரணம் இடம் ஊருக்கு ஒதுக்குப்றத்தில் இறுப்பது.
இன்னும் சில பேர் வீடு கட்டுவதற்க்கு இடத்தை வாங்குவதில்லை. 5 அல்லது 10 வருடத்தில் எப்படியும் இடத்தின் விலை ஏறிவிடும், நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று. இதனால் குறைந்தது 10 வருடத்துக்கு அந்த இடம் எதற்க்கும் பயன்படாமல் கடைசியில் தரிசு நிலமாக மாறுகிறது.
--------------------------------------------------------------------------------------------------
2. உணமைய சொல்லனும்னா இந்த இடத்தை முதலில் வாங்கும் பணமுதலைகள் எவ்வளவுக்கு வாங்கி விற்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா...?
ஒரு பொருள 100 ருபாய்க்கு வாங்கி 110 க்கு விற்றால் அதில் ஒரு நியாயம் இருக்கு.. ஆனால் அதே பொருளை 200 ருபாய்க்கு விற்றால் அது அநியாயம். அதே பொருளை 1000 ருபாய்க்கு விற்றால்... !!! இது தான் ரியலெஸ்டேட்.
நாம வாங்குற எந்த பொருளாக இருக்கட்டும், அதில் ஒரு ருபாய் விலை ஏறினால் கூட கோபபடும் நாம், இதை பற்றி ஏன் சிந்திக்க மாட்டேங்குறோம்..!!!!
--------------------------------------------------------------------------------
3. நிலத்தை வாங்கி போடுரவங்க சொல்லுறா காரணம்... (இன்று நிலத்தை வாங்கி போடலேனா.. நாளைக்கு அதோட விலை ஏறிடுமா..) என்னங்க இது முட்டால் தனமா இருக்கு...

நான் தெரியாமதான் கேக்குறேன் எல்லா நிலத்தையும் அடிக்கடி வாங்குறதுனாலையும்.. விற்கிறதுனாலையும் தான் அதன் விலை ஏறுகிறாது... மன்னிக்கவும் விக்கிறாவங்கலே விலையை ஏற்றி விட்டுடுராங்க..
ஏன் நாம் தேவைபடும் போது மட்டும் இடத்தை வாங்கினால், அதன் விலை எதற்க்கு ஏறப்போகிறது.
----------------------------------------------------------------------------
4. பணமுதலைகளிடம் நிலத்தை விற்க்கும் விவசாயிகள் சொல்லும் காரணம்.. (மழை வரமாட்டேங்குது, அதனால் விவசாயம் சரியில்லை, லாபம் இல்ல, அதனால இடத்தை விற்கிறோம்)

இருக்கின்ற மரத்தை எல்லாம் வெட்டி காடுகளை அழிச்சி பிளாட்டு போட்டு வித்தா எப்படி மழை பெய்யும்.. விவசாயம் பெருகும்...
----------------------------------------------------------------------------------
அவங்க வாங்குறாங்க விக்கிறாங்க நீ என்ன இதுக்கு இதலாம் கேக்குறேனு நீங்க சொல்லலாம்..

காரணம் இருக்கு..  யாரோ வாங்கி விற்க்கும் நிலத்தினால் எனக்கும் பாதிப்பு இருக்கு, எனக்கு மட்டும் இல்ல உங்க எல்லாருக்கும் தான்.
நல்லதோ... கெட்டதோ... நாம் பயன்படுத்துர அணைத்து பொருளும் விவசாயத்துல இருந்துதான் கிடைக்கிறது. அது சாப்பிடுற சாப்பாடா இருக்கட்டும், அணிகின்ற ஆடையாக இருக்கட்டும், ஏன் பிடிக்கின்ற சிகரெட்டாக இருக்கட்டும் அணைத்துமே விவசாயத்துலதான் கிடைக்கிறது.

இன்று ஒரு லட்சத்துக்கு ஒரு இடத்தை வாங்கி 10 வருடம் கழித்து அதை 10 லட்சத்துக்கு விற்றால் நமக்கு 9 லட்சம் லாபமாம்...!!! இது மக்கள் கருத்து..
ஆனால் அதே 10 வருடத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்க குடும்பத்துக்கு 20 லட்சம் நஷ்டம் வந்தாலும் ஆச்சர்யபடுரதுக்கு ஒன்னும் இல்ல..

நாம வாங்குர அணைத்து பொருளும் அரசாங்கத்துக்கு, நாம் நமக்கே தெரியாமல் வரி செலுத்திதான் வாங்குகிறோம்.
நாட்டில் விவசாயம் தடைபடும் போது அதில் இருந்து கிடைக்கும் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அதன் விலையும் ஏறுகிறது.

ஒரு சின்ன பொருளின் விலை ஏறுனதுக்கு கொந்தளிக்கும் நாம்.. நிலம் வாங்கும் போது மட்டும் கண்ண மூடிட்டு சொன்ன விலைக்கு வாங்கிறோம். ஏன் இதுக்கு வீதியில இறங்கி போரட வேண்டியது தான...?

அது மட்டும் இல்ல இது தொடர்ந்தால் இந்தியா 2020 வல்லரசு ஆகுதோ இல்லையோ...
சோத்துகு பக்கத்து நாட்ல பிச்சை எடுக்க வேண்டிய நிலமை வந்துடும்....

இவண் spark MRL.K
:
:

No comments:

Post a Comment