Wednesday, October 2, 2013

ruthratsam (ருத்ராட்சம்)

ருத்ராட்சம் ஏன் அணிகிறோம், எதற்க்கு அணிகின்றோம்..?

பொதுவாக இப்பொழுது மக்களிடம் ஒரு தவறான கருத்து உள்ளது.. அதாவது ருத்ராட்சம் இந்து மதத்தினர் மட்டும் தான் அணியவேண்டும். மற்ற மதத்தினர் அணியக்கூடாது. இது கடவுள் சம்பந்தமான ஒன்று. இதை மற்ற மதத்தினர் அணிந்தால் அவர்கள் மதத்திற்க்கு பன்னுகின்ற ஒரு துரோகம்  என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால் இது எதற்க்கு அணிகின்றோம், ஏன் அணிகின்றோம் என்று எத்தனை பேருக்கு தெரியும்..?

அதன் சிறப்பு பண்புகள் என்ன...?
----------------------------------------------
1. சக்தி மிக்க மின்காந்த பண்புகள் (Electromagnetic)
2.காந்தமுனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Paramagnetic)
3.சக்திகளை கொண்டு சேர்க்கும் ஊடகத் தன்மை (Inductive)

உண்மையில் ருத்ராச்சத்தின் பயன் என்ன..?
--------------------------------------------------------------
ருத்ராட்சத்தை அணிவதால் அதிலிருந்து வரும் மின்க்காந்த அலையினால் இதயதுடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது.
==========

ஆதிகாலத்தில் மற்ற மதங்கள் இங்கு வருவதற்க்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் ருத்ராட்சத்தின் இத்தகைய மகிமையை அறிந்து மக்களை அணியச்சொன்னார்கள். ஆனால் ருத்ராட்சம் என்பது வெரும் தாவரத்திலிருந்து (மரத்திலிருந்து) கிடைக்க கூடிய ஒரு கொட்டைதான இதைபோய் யாரவது அணிவார்களா என்றனர். உதாரணமாக உங்களிடமே ஒரு வேப்பங் கொட்டையையோ அல்லது புளியங்கொட்டையையோ அணியச்சொன்னால் அணிவீர்களா..?

அதனால் தான் ருத்ராச்சம் என்பது சிவனின் சொத்து. கடவுளுக்கு சொந்தமானது என்றும் சிவனின் கண் அல்லது கண்ணில் இருந்து வந்தது என்று கூரி, கடவுளின் போர்வையை போற்றி மக்களை அணியச்செய்தனர்.

காலப்போக்கில் மற்ற மதங்கள் இங்கு வந்த பின்பு இது இந்துக்களுக்கு சொந்தம் என்று மற்றவர்கள் இதை அணிய மறுக்கிறார்கள்.

ருத்ராச்சத்தின் பயனை சமீபகாலத்தில் வாரணாசியில் உள்ள தொழில் நுட்ப கல்லூரியில் உள்ள டாக்டர். சுபாஷ் ராய் தலைமையில் உயிர் வேதியியல் துறை, மனநோய் மருத்துவ துறை, பொது மருத்துவ துறை, உளவியள் துறை ஆகிய நான்கு துறைகளும் இணைந்து ருத்ராட்சம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து மேலே உள்ள ருத்ராச்சத்தின் மூன்று சிறப்பு தன்மையை பற்றி கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் சில விவரங்கள்..
-------------------------------------
1. ருத்ராச்சத்தின் வேதியியல் பெயர் எலெயோகார்பஸ் கேனிட்ரஸ் ராக்ஸ்ப் (Elaeocarpus Ganitrus Roxb )

2. நேபாளத்தில் ருத்ராட்ச மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இந்தியாவில் மேற்குத் தொடற்ச்சி மலைகளிலும் ருத்ராட்சம் மரங்கள் காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நரங்கள் விளைகின்றன.

3. ருத்ராட்ச மரத்தில் சுமார் 36 உட்பிரிவுகள் இருந்தாலும் அவற்றில் மூன்று பிரிவுகள் மட்டுமே ருத்ராட்சமாகப் பயன்படுத்தப்படுகிறது.

4. செம்மை நிறம், கறுப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம் (பொன் நிறம்) ஆகிய நிறங்களில் ருத்ராட்ச மணிகள் கிடைக்கிறது.

நாம் ஒரு செயலை செய்வதற்கு முன் ஏன் செய்கிறொம்.. எதற்க்கு செய்கிறோம்.. அன்று அறிந்து செய்யவேண்டும். அதை விட்டு விட்டு அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்க என்று செய்யவேண்டாம். தெரிந்து செய்வோம்.. தேவையற்ற மூட நம்பிக்கைகளை மறாப்போம்..

(படித்ததில் பிடித்தது.. )
.

No comments:

Post a Comment