Saturday, September 28, 2013

vanavil (Blind faith)

வானவில் உண்மையில் அர்ஜுனன் விட்ட வில்லா..? (மூட நம்பிக்கை)

பொதுவாக மழை பெய்து கொண்டிருக்கும் போது வானவில் தோன்றுகிறது. அதை பார்த்த நாம் அர்ஜுனன் போடு வில் என்கிறோம். அப்படிதான் நம் முன்னோர் பலர் நம்மை  நம்ப வைத்துள்ளனர். இது எவ்வளவு பெரிய மூட நம்பிக்கை.

வானவில் எப்படி, எப்போது தோன்றுகிறது..?
----------------------------------------------------------------------------
1.வானவில் சூரியனுக்கு எதிர் திசையிலேதான் தோன்றும்.
(காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் தோன்றும்.)

2.வானவில் தோன்றும் திசையில் கருமேகம் இருக்க வேண்டும் அல்லது மழை பெய்து கொண்டிருக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, இந்த வானவில்லிற்கு மேலே துணை வானவில் ஒன்று தோறும். இந்த வானவில் தெளிவற்றதாகவும், பிரதான வானவில்லின் வர்ணங்களின் வரிசைக்கு எதிர்மாறாகவும் இருக்கும். சூரிய ஒளி இருமுறை பூரண எதிரொளித்தால் இந்த வானவில் தோன்றுகிறது. இதுவே வானவில் தோன்றும் விதம் ஆகும்.

உதரணமாக காலையில் 8 அல்லது 9 மணியளவில் சூரிய ஒளி படக்கூடிய இடத்தில் மேற்க்கு நோக்கி நின்று கொண்டு, வாயில் தண்ணீரை ஊற்றி, பின் 'ப்பூ' என்று துப்பினால் அந்த நீர்த்திவலைகளில் வானவில் தோன்றும். அங்கு உண்மையில் அர்ஜுனன் தான் உங்கள் வாய் வழியாக வில் விட்டு வானவில் வந்ததா..!!? இது எவ்வளவு பெரிய மூட நம்பிக்கை..

அர்த்தமுள்ள நம்பிக்கைகளை நம்புவோம்..
அர்த்தமற்ற மூடநம்பிக்கைகளை மறப்போம்...

அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்திற்க்கு எனது நன்றி
.
.

No comments:

Post a Comment