Tuesday, September 10, 2013

டிஜிடல் பேனர் கலாச்சாரம்

டிஜிடல் பேனர்

சமீப காலமாக நம்ம மாநிலத்துல ஒரு கலாச்சாரம் பயம்க்கரமா பரவிகிடக்குது…!!  அதாவது எந்த ஒரு நல்ல காரியம்னாலும், அரசியல் விளம்பரம்னாலும் டிஜிடல் பேனர் வைப்பது, அதிலும் கல்யாண வீட்டில் அடிக்கும் பேனர் வித்யாசமானது...  அதுல ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளை பெருமையா எழுதியிருப்பாங்க...

அது…!!!

"எங்க குல இல்ல திருமண விழா"

இதுல ஒரு குறிப்பிட்ட சாதி பெயரும் இடம் பெற்றிடுக்கும்... கூடவே ஒரு தலைவரேட புகைபடம் இடம் பெற்றிடுக்கும்...

இந்த டிஜிடல் பேனர்ல இடம் பெறுவதற்கு அந்த தலைவருக்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி….!!   "அவர் அந்த சாதியில பிறந்திருக்க வேண்டும்"

இதுல ஒரு சின்ன உண்மை என்னன்னா…?
தன்னுடைய சாதிகாரர்னு அவங்க பெருமையா  தலைவரேட புகைபடத்த போட்டுகிறாங்க…!! ஆனா இத பாக்குர மத்த சாதிகார பயலுக என்ன நினைக்குறாங்க தெரியுமா..?

" இந்த தலைவர்களாம் இன்ன சாதிக்காரங்கானு, மத்த சாதிகார பயலுகளுக்கு பிடிக்காமலேயே போய்ருது…!  அது மட்டும் இல்லைங்க.. அவங்க நாட்டுக்காக உழைச்சாங்கலா, இல்ல சாதிக்காக உழைச்சாங்கலானு பெரிய சந்தேகமே அந்த இடத்துல வருது…!! "

பல மக்கள் சேர்ந்ததுதான் ஒரு நாடு.. அந்த நாட்டு சுதந்திரத்துக்கக பாடுபட்ட நம் முன்னோர்கள் உண்மையில் நம் மனதில் வழவில்லை... டிஜிடல் பேனர்லையும், போஸ்டர்லையும் தான் வழ்ந்துக்கிட்டு இருக்காங்க...?

சத்தியமா நான் ஒன்னே ஒன்னு சொல்லிகிறேன்...
"இந்த தலைவர்கள்கலாம் இப்ப உயிரேட இருந்தா... இந்த சாதி வெறி பிடிச்ச மக்களுக்கா... நாம போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்தோம்னு காரி துப்புவாங்க..?


No comments:

Post a Comment