உறுப்பு தானம்...
உயிர்களை காக்கும்...
நாம் இறந்த பின்பு நம் உடலை சாஸ்த்திரம் சடங்கு என்ற பெயரில் தீயில் எரித்தோ.. அல்லது பூமியில் புதைத்தோ இறுதி காரியத்தை முடிக்கிறோம்... தீயில் எரிக்கும் போதும்.. பூமியில் புதைத்தபின்பு கரயான் நம்மை அரிக்கும் போதும் நமக்கு வலிக்க போவதும் இல்ல... நமக்கு என்ன நடக்குதுங்றதும் தெரிய போவதும் இல்ல...
இன்று உலகத்துல எத்தனையோ பேருக்கு உடல்ல பாதிப்பு ஏற்படுகிறது... கண் தெரியாதவர்கள்.. சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம் என உடல் உறுப்புகளில் பாதிதவர்கள் என பலர் உள்ளனர்... அவர்களுக்கு நாம் இறந்தபின்பு நம் உறுப்புகளை தானமாக அளிப்பதால் நாம் இறந்த பின்பும் உயிர் உயிர்வாழ வழிவகுக்கிறது...
-------------------------------------------------------------------------
1. நாம் எந்த உறுப்புகளை கொடை அளிக்கலாம்/பெறலாம்/உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்.?
சிறுநீரகம், இதயம், கல்லீரல்,நுரையீரல், கணையம், சிறுகுடல் ஆகிய உறுப்புகளை தானம் செய்யலாம்..
-------------------------------------------------------------------------
2. திசு கொடை என்றால் என்ன?
அறுவை சிகிச்சை மூலமாக முழு உறுப்பையும் மாற்றாமல் கண்ணின் கருவிழி (கார்னியா), தோல், எலும்பு, தசைநாண் (tendons), சவ்வு (cartilage) இதய தடுக்கிதழ்(heart valves) போன்ற ஒரு சில திசுக்களை மாற்றும் தானமாக பெற்று மற்றவருக்கு பொருத்துவது திசு கொடையாகும்.
வெற்றிகரமான முதல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை 1905ல் நடந்தது. தற்சமயம் வருடந்தோறும் பல ஆயிரக்கணக்கானவர்கள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வையை திரும்ப பெறுகிறார்கள்.
எலும்பு, தசை நாண், சவ்வு ஆகியவற்றின் மூலம் விபத்தினால் அல்லது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெறுகிறார்கள். எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையையோ, காலையோ வெட்டி எடுக்க வேண்டிய அவசியம் எலும்பு கொடை மூலம் குறைகிறது..
பிறக்கும் போதே உடல் ஊனத்துடன் பிறந்த குழந்தைகள் மற்றும் இதயத்தில் பிற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இதய தடுக்கிதழ் மாற்று சிகிச்சை பலனளிக்கிறது.
தீப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் கொடை பலனளிக்கிறது.
திசு கொடை என்பது உறுப்பு கொடையை விட எளிதனது. ஒருவர் இறந்து 48 மணி நேரம் ஆனாலும் கூட திசுகொடை அளிக்கலாம்.
இனப்பெருக்க உறுப்புகள் மட்டும் திசுகொடை மூலம் பெறப்படுவதில்லை…
-------------------------------------------------------------------------
3. உறுப்பு கொடை அளிக்க சம்மதித்த ஒருவர் விபத்தில் சிக்கினால் அவருக்கு சிகிச்சை அளிக்க மாட்டார்களா..?
இல்லை. எந்த நோயாயாளியின் உயிரை காப்பதே மருத்துவரின் முதல் பணி. அனைத்துவித சிகிச்சை செய்தும், பலனில்லாமல் மூளை சாவு ஏற்பட்டாள் உறுப்பு கொடை அளிக்கப்படும்.
-------------------------------------------------------------------------
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக்கல்லுரியை அனுகவும்..
சென்னையில் உள்ளவர்கள்..
CADAVER TRANSPLANT PROGRAMME TAMIL NADU
165 A, Tower Block I, 6th floor, (Next to Bone Bank)
Rajiv Gandhi Govt. General Hospital, Chennai - 600 003
Email - organstransplant@gmail.com
Phone - 91 44 2530 5638
Tele Fax - 91 44 2536 3141
http://www.dmrhs.org